பேருந்தில் மின்சாரம் பாய்ந்து 32 பேர் பலி
மண்ட்லா & ஹாஜிபூர்: மத்தியப் பிரதேதத்தில் உயர் அழுத்த மின்சாரக் கம்பி அறுந்து பஸ் மீது விழுந்ததில் அதில் பயணம் செய்த 32 பேர் பலியாகிவிட்டனர்.
மண்ட்லா நகருக்கு அருகே கோப்லாபுரா என்ற கிராமத்தில் இன்று இந்த சம்பவம் நடந்தது.
பின்டிரை என்ற இடத்திலிருந்து மண்ட்லாவுக்கு சென்று கொண்டிருந்த ஒரு தனியார் பேருந்து உயர் அழுத்த மின்சார போஸ்டின் மீது மோதியது.
இதில் மின்சாரக் கம்பி அறுந்து பஸ் மீது விழுந்ததில் பஸ் முழுவதும் மின்சாரம் பாய்ந்து அதிலிருந்த 32 பேர் உடல் கருகி பலியாயினர்.
மேலும் காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிகார்-லாரியில் மின்சாரம் பாய்ந்து 3 பேர் பலி:
அதே போல பிகார் மாநிலம் ஹாஜிபூரில் மின்சாரம் தாக்கி 3 பேர் பலியாகியினர். மேலும் 22 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வைஷாலி மாவட்டத்தில் 80 பேரை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது மேலே இருந்த உயர் மின் அழுத்தக் கம்பியில் அந்த லாரி உரசியது.
இதில் லாரியில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து லாரி உடனடியாக தீப் பிடித்து எரிந்தது. அதில் லாரியிலிருந்த 3 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 22 பேர் படுகாயமடைந்தனர். முன்னதாக இந்த விபத்தில் 10 பேர் பலியானதாக தகவல்கள் வந்தன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications