கல்வி கட்டணம்: தனியார் பள்ளிகள் மிரட்டலுக்கு அரசு பணியாது-அமைச்சர் தென்னரசு
சென்னை: கல்விக் கட்டண விஷயத்தி்ல் தனியார் பள்ளிகளின் மிரட்டலுக்கு அரசு பணியாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
சட்டசபையில் இன்று பாமக உறுப்பினர் வேல்முருகன், பேசுகையில் தனியார் பள்ளிகளுக்கான கட்டணங்களை அரசு நிர்ணயித்துள்ளது. அதை உச்ச நீதிமன்றமும் அமலாக்க உத்தரவிட்டுள்ளது. ஆனால் சில தனியார் பள்ளி நிர்வாகிகள் இந்த கட்டணம் போதாது என்றும், ஜூன் மாதம் பள்ளிகளை திறக்கமாட்டோம் என்று கூறியுள்ளனர். அரசின் உத்தரவை மதிக்காத இந்தப் பள்ளிகளை அரசுடமையாக்க வேண்டும் அல்லது அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு,
தனியார் பள்ளிகளுக்கு எவ்வளவு கட்டணம் நிர்ணயிக்கலாம் என்பது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான குழு நிர்ணயம் செய்துள்ளது.
10,000க்கும் மேற்பட்ட இந்தப் பள்ளிகள் அனைத்திலும் பள்ளிகளை நடத்த ஆகும் செலவு, அந்த பள்ளியில் உள்ள வசதிகள், எவ்வளவு கட்டணம் வாங்கலாம் என்ற அவர்களது கருத்து எல்லாவற்றையும் கேட்டு அறிந்த பிறகே ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனி கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை நீதிமன்றமும் எற்றுள்ளது.
அரசின் இந்த நடவடிக்கைக்கு சாதாரண ஏழை, எளிய மக்களிடம் பாராட்டும் வரவேற்பும் கிடைத்துள்ளது. எந்தப் பள்ளியாவது கட்டணம் குறைவாக உள்ளது என்று கருதினால் சம்பந்தப்பட்ட குழுவிடம் முறையீடு செய்யலாம். அது பரிசீலிக்கப்படும். அதை விடுத்து மிரட்டல் விடுத்தால் அதற்கு இந்த அரசு பணியாது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications