பி.இ. சேர்க்கை-குறைந்தபட்ச மதிப்பெண் ஒரு வாரத்தில் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் குறைக்கப்படவுள்ளது.

அது எவ்வளவு குறைக்கப்படும் என்ற விவரம் ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.

சட்டசபையில் அவர் கூறுகையில், கடந்த ஆண்டு 548 என்ஜினீயரிங் கல்லூரிகளில் கவுன்சிலிங்குக்குப் பிறகும் 30,581 இடங்கள் காலியாக இருந்தன.

இதனால் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களைப் போல தகுதி மதிப்பெண்ணைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அதுபற்றி பரிசீலித்து வருகிறோம்.

பிளஸ்-2 பாஸ் செய்திருந்தாலே போதும் என்று அறிவிக்கக் கோருகின்றனர். அந்த அளவுக்குக் குறைக்க முடியாது.

இப்போது குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் இதர பிரிவினருக்கு 55, பிற்படுத்தப்பட்டோருக்கு 50, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 45 என்றும் இருக்கிறது. இதை ஓரளவு குறைத்து, ஒரு வாரத்திற்குள் அறிவிக்கப்படும்.


உங்கள் பிளஸ் டூ தேர்வு முடிவுகளைக் காண

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+