புழல் சிறையில் சோலார் செல்போன் - போலீஸார் அதிர்ச்சி

சென்னை அருகே புழலில் ஆசியாவிலேயே அதிநவீன சிறைச்சாலை உள்ளது. இதில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் அடைக்கக் கூடிய இரண்டு மத்திய சிறைகள் மற்றும் பெண்களுக்கான ஒரு சிறப்பு சிறையும் உள்ளது.
இந்த சிறைகளுக்குள் தடையை மீறி செல்போன், கஞ்சா போன்றவை கடத்தப்படுவதாக அவ்வப்போது புகார்கள் எழுகின்றன. அதிகாரிகளும் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையில் செல்போன், சிம் கார்டு, போன்றவைகள் சிக்குகின்றன.
இந்த வகையில் கடந்த வருடம் நடத்தப்பட்ட சோதனையில் 90 செல்போன்கள், 40 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த செல்போன்கள் மற்றும் சிம் கார்டுகள் செருப்புகளிலும், பப்பாளி பழங்களிலும் மறைத்து வைத்து சிறைக்குள் கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணை கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள பிளாக் 5ல் செல்போனில் சிலர் பேசுவதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன் போலீசார் சோதனை நடத்தினர். அதில் பரத் என்ற கைதியிடம் இருந்து அதிநவீன செல்போன் ஒன்று கைப்பற்றப்பட்டது. அந்த செல்போனுக்கு மின்சார பேட்டரி தேவையில்லை. சூரிய வெப்பத்தினால் இயக்கக் கூடிய செல்போன் என்பது தெரியவந்தது.
இது போலீஸாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பலத்த பாதுகாப்பு மிகுந்ததாக கூறப்படும் புழல் சிறையில் சூரிய சக்தி செல்போன் சிக்கியிருப்பது அதிர்ச்சி அலைகளையும், சிறைக்குள் உள்ள கண்காணிப்பின் தரத்தையம் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
டிஐஜி துரைசாமி தலைமையில் 500 போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர். காலை 6 மணி முதல் 9.30 மணி வரை இந்த சோதனை நடைப்பெற்றது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications