நெல்லை ஏழை மாணவிகள் மாநில அளவில் சாதனை

நெல்லை பாளையங்கோட்டை முப்புடாதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் டெய்லர் ஆதிமணி-ஜெயந்தி தம்பதியினர் மகள் சங்கரஸ்வரி. அடிப்படை அறிவியல் பாடத்தில் மாநில அளவில் 200-186 மதிப்பெண் பெற்று முதல் மாணவியாக தேர்வு பெற்றுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆழிக்குடியை சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி கணபதி-முத்தம்மாள் தம்பதியினர் மகள் மகராசி அடிப்படை அறிவியல் பாடத்தில் 200-182 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இம்மாணவிகள் இரண்டுபேரும் பாளை புனித இஞ்ஞாசியார் மேல்நிலைபள்ளியில் படித்து வருகின்றனர். இவர்களை ஆசிரியர், ஆசிரியைகள் பாராட்டினர்.
விளாத்திகுளம் ஜாஸ்மின் பேட்டி மாநில அளவில் 3வது இடம்
பிளஸ் டூ தேர்வில் புவியியல் பாடத்தில் மாநில அளவில் 3ம் இடம் பிடித்த ஜாஸ்மின் எதிர்காலத்தில் டீச்சராக விருப்பம் தெரிவித்தார்.
விளாத்திகுளம் அருகே நாகலாபுரம் சுவாமி அய்யா நாடார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்டூ தேர்வு எழுதிய ஜாஸ்மின் புவியியல் பாடத்தில் 200க்கு 196 மதி்ப்பெண்கள் எடுத்து மாநிலத்தில் மூன்றாவது இடம் பிடித்தார். பாடவாரியாக அவர் பெற்ற மதிப்பெண்கள் வருமாறு, தமிழ்-178, ஆங்கிலம்-153, புவியியல்-196, அரசியல் அறிவியல்-183, வரலாறு-172, பொருளியல்-171. மொத்தம்-1053-1200.
மாணவியின் தந்தை அப்துல் ரகுமான் திருப்பூரில் பனியன் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். தாய் சைராபானு, அக்காள் ரசூல் பாத்திமாள். மாணவி கூறியதாவது,
நான் பிளஸ்டூ தேர்வில் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்றதற்கு ஆசிரியர் ரவிசந்திரன், தந்தை அப்துல் ரகுமான், மற்றும் ஆசிரிய, ஆசிரியர்கள், தோழிகள் கொடுத்த ஊக்கம்தான் காரணம். எதிர்காலத்தில் டீச்சராக விரும்புகிறேன். ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து படிக்க விரும்புகிறேன்.
நான் மாநில அளவில் ரேங்க் பெற்றதற்கு எப்படி ஆசிரியர்கள் காரணமாக இருந்தார்களோ அதே போ்ல் எதிர்காலத்தில் நானும் பல மாணவ, மாணவிகளுக்கு ஊக்கம் கொடுத்து கல்வியில் உயர் நிலையை அடைய செய்ய ஆசிரியராக வர விரும்புகிறேன் என்றார்.
தேர்ச்சி விகிதம்
நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 22,910 பேர் தேர்வு எழுதினர். இதில் 12,473 மாணவர்களும், 16,437 மாணவிகளும் ஆவர். இதில் 26,442 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 91.39.
தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 16055 பேர் தேர்வு எழுதினர். இதில் 15064 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 93.84. கடந்த ஆண்டை விட இருமாவட்ட பள்ளிகள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications