புதுச்சேரி அரசைக் கண்டித்து 17ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கல்விக் கட்டணம் முறைப்படுத்தாததைக் கண்டித்து 17ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை
தனியார் பள்ளிகளால் வசூல் செய்யப்படும் கல்விக் கட்டணத்தை முறைப்படுத்தாத, அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை குறைந்த ஊதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கின்ற ஆளும் காங்கிரஸ் அரசைக் கண்டித்தும் புதுச்சேரி மாநிலக் கழகத்தின் சார்பில், 17 ந்தேதி (திங்கட் கிழமை) காலை 10 மணி அளவில், புதுச்சேரி கல்வித் துறை எதிரில் இந்திரா காந்தி சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications