ஜார்க்கண்ட் புதிய முதல்வராக அர்ஜூன் முண்டா தேர்வு
டெல்லி: ஜார்க்கண்ட் மாநில முதல்வர் பதவிக்கு அர்ஜூன் முண்டாவை பாஜக தேர்வு செய்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்க சிபு சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து அங்கு ஆட்சியமைக்கும் வேலைகளில் பாஜக தீவிரமாகியுள்ளது.
முதல் கட்டமாக முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் தொடங்கின. முன்னாள் முதல்வர் அர்ஜூன் முண்டா, முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, துணை முதல்வர் ரகுவர் தாஸ் ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.
பழங்குடியினத்தவரையே முதல்வர் பதவிக்கு தேர்வு செய்யவேணடும் என பாஜகவைச் சேர்ந்த பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து அர்ஜூன் முண்டாவையே முதல்வர் பதவிக்கு தேர்ந்தெடுக்கும்
நிலைக்கு பாஜக தள்ளப்பட்டது.
இதையடுத்து தற்போது முண்டாவையே முதல்வராக்க பாஜக தீர்மானித்துள்ளது. நேற்றே இந்த அறிவிப்பு வெளியிடப்படவிருந்தது. ஆனால் முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் பைரான் சிங் ஷெகாவத் மரணமடைந்ததால் அந்த அறிவிப்பை பாஜக தள்ளிப் போட்டு விட்டது.
நாளை ஷெகாவத் இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன. அதன் பின்னர் முண்டா தேர்வு செய்யப்பட்ட தகவலை பாஜக தலைமை முறைப்படி வெளியிடும் எனத் தெரிகிறது.
-
பாஜக கூட்டணிக்கு விஜய் வருவாரா? டெல்லி தலைமை முடிவு செய்யும்.. நயினார் நாகேந்திரன் சூசக பதில்! -
பாஜக கூட்டணிக்கு போகும் விஜய்? மறுக்காத சிடிஆர் நிர்மல் குமார்.. கொடுத்த விளக்கத்தை பாருங்க -
ஓட்டு வரும் ஆனா சீட்டு வராது! கொள்கை தூக்கிப் போடுங்க.. பாஜக கூட்டணிக்கு போங்க! விஜய்க்கு அட்வைஸ்! -
விஜய் ஆசைக்கு ‘வேட்டு’ வைத்த ரங்கசாமி.. புதுச்சேரியில் தவெக உடன் கூட்டணி கிடையாது.. அதிரடி முடிவு! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம்












Click it and Unblock the Notifications