கோவில்களில் எதற்கெடுத்தாலும் கட்டணம் வசூலிப்பதா? - ராம. கோபாலன் எதிர்ப்பு
சென்னை: கோவில்களில் எதற்கெடுத்தாலும் கட்டணம் வசூலிப்பதை அரசு கைவிட வேண்டும் என்று இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராம. கோபாலன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
நல்லோர் எதனை எதிர்பார்த்து ஆலயத்திற்கு தங்கள் சொத்துகளை அளித்தார்களோ அதற்கு மாறாக அந்த சொத்துகளை சுயநலமிகள் ஆக்கிரமிப்பதும் அரசு நிர்ணயித்துள்ள அடிமனை வாடகையைக்கூட செலுத்தாமல் 80 ஆண்டுகளாக உட்கார்ந்து தின்பதும் கொடுமை!
அறநிலையத்துறை அமைச்சர் இதனை உணர்ந்து சட்டசபையில் ஆணித்தரமாக பதில் அளித்துள்ளார். ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து ஆலயச் சொத்துகளை மீட்பதும், ஆலய சொத்துகளை சீராக பராமரிப்பதும் அரசின் கடமை!
வாடகை, குத்தகை செலுத்தாதவர்கள் சுயநலமிகள்! சட்டவிரோதமாக இவர்களிடம் ஆசையைத் தூண்டி விடுபவர்களை அரசு கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவன் சொத்து குலநாசம் என்பதை உணர்ந்து தர்மப்படி நடந்தால் நாட்டிற்கும் வீட்டிற்கும் நல்லது.
மேலும் ஆலயப்பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவித்துள்ளதையும் வரவேற்கிறோம். இந்த ஊதிய உயர்வு உண்மையான ஆலயப்பணியில் உள்ளோரை சென்றடையும் என்று நம்புகிறோம்.
வருடம் ஒருமுறை ஆலயத்திற்கான அசையும், அசையா சொத்துகள் பற்றி மதிப்பீடு செய்து அறிவிக்கவேண்டும். ஆலயத் திருட்டுகள், மோசடிகளைத் தடுக்கவும், திருடு போனவற்றை கண்டுபிடிக்கவும் அரசு முனைப்பு காட்ட வேண்டும்.
ஆலய வருமானத்தை பெருக்க வேண்டும் என்பதற்காக பக்தர்களிடம் எதற்கெடுத்தாலும் கட்டணங்கள் வசூலிப்பதை கைவிடவேண்டும். அனைத்து கோயில்களிலும் தரிசன கட்டணத்தை நீக்க வேண்டும். சீராக, விரைவாக அனைவரும் இறைவனை தரிசித்து வழிபட ஆவன செய்ய வேண்டும்.
வருமானம் வரும் ஆலயத்தை மட்டுமே கவனத்தில் கொள்கிறது அரசு! வருமானமில்லாத, சிதிலமடைந்த கோவில்களை புனருத்தாரணம் செய்யவும், கிராம கோவில்கள் போன்றவற்றில் ஒருகாலப் பூஜையாவது நடைபெறவும் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
திருப்பதி தேவஸ்தானம் செய்வது போல சிறிய ஆலயங்களுக்கு வேண்டிய பொருட்கள், வழிபாட்டிற்கு வேண்டிய நிரந்தர உதவிகள் வழங்கிட முன்வரவேண்டும்.
ஆலயம் சிறந்தோங்க அறம் விளங்கும் என்பது பெரியோர் வாக்கு. எல்லா ஆலயங்களிலும் நித்திய வழிபாடும், விழாக்களும் சிறந்தோங்க வழிகாண வேண்டும் என்று கூறியுள்ளார் ராம. கோபாலன்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications