சிவகாசி பத்திரகாளியம்மன் கோவில் பந்தலில் தீ - பதட்டம்
Subscribe to Oneindia Tamil
சிவகாசி: சிவகாசியில் உள்ள பிரபலமான பத்திரகாளியம்மன்கோவில் பந்தலில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சிவகாசி பத்திரகாளியம்மன்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத கடைசியில் 5 நாள் விழா பொங்கல் விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா 3 நாட்களுக்கு முன்பு முடிந்தது.
விழாவையொட்டி சிவகாசி நகர ஜவுளி வர்த்தக சங்கத்தினர் சார்பில் பந்தல் போட்டு மண்கடப்படி நடத்தினர்.விழா முடிந்தும் பந்தலைப் பிரிக்கவில்லை.
இந்த நிலையில் இன்று காலையில் திடீரென பந்தலில் தீப்பிடித்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
கடும் வெயில் அடித்து வருவதால் பந்தல் சூடாகி தீப்பிடித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications