ஆஸ்திரேலியாவில் படகுகளில் வந்த 92 அகதிகள் கைது
Subscribe to Oneindia Tamil
கான்பெரா மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு வட மேற்கில் உள்ள ஸ்காட் ரீஃப் பகுதியில் படகு மூலம் வந்த 92 அகதிகளை ஆஸ்திரேலிய கடற்படையினர் பிடித்து கிறிஸ்துமஸ் தீவுக்குக் கொண்டு சென்றுள்ளனர். அவர்களில் 40க்கும் மேற்பட்டோர் இலங்கைத் தமிழர்கள் எனக் கூறப்படுகிறது.
கடலில் வந்து கொண்டிருந்தபோது இவர்களது படகை ஆஸ்திரேலிய கடற்படையினர் வழிமறித்து கிறிஸ்துமஸ் தீவுக்கு அழைத்துச் சென்றனர். அந்த படகில் தண்ணீர் புகுந்து தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் படகில் இருந்தவர்கள் உதவி கோரி அலறியதாகவும், இதைப் பார்த்து கடற்படையினர் விரைந்து சென்று அவர்களை மீட்டதாகவும் ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications