திமுக-காங்கிரசுக்கு எதிராக கூட்டணி-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
மதுரை: தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக கூட்டணி அமைக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன் கூறினார்.
மதுரையில் நிருபர்களிடம் பேசிய அவர், திமுக- காங்கிரஸ் கட்சிகளின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்க்கும் அதிமுகவை நாங்கள் ஆதரிப்பது என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது.
தற்போது அதிமுகவுடன் கூட்டணியாக இருக்கிறோம். அடுத்த சட்டசபை தேர்தலில் கூட்டணி பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் திமுக- காங்கிரசுக்கு எதிராகக் கூட்டணி அமைப்போம்.
சிறுதாவூரில் 53 ஏக்கர் நிலத்தை சம்பந்தப்பட்ட 20 குடும்பங்களைச் சேர்ந்த வாரிசுதாரர்களுக்கு ஒப்படைக்க வேண்டும்.
ஏழை, எளிய மக்களுக்கு உயர்கல்வி என்பது எட்டாக் கனியாக உள்ளது. இந்த நிலையில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி, உயர்கல்வி கவுன்சில் அமைப்பது குறித்த மத்திய அரசின் முயற்சி ஆகியவை அபாயத்தை ஏற்படுத்தியுள்ளன. பள்ளி கட்டணத்தை இன்னும் குறைக்க வேண்டும்.
பருத்தி நூல் தற்போது கிலோவிற்கு 5 ரூபாயாக குறைக்கப்பட்டது போதாது. விசைத்தறி, கைத்தறி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே நூல் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications