உலகின் 'டாப்' தேடப்படுவோர் பட்டியலில் ஒசாமா-தாவூத்

Subscribe to Oneindia Tamil

Osama and Dawood Ibrahim
மும்பை: உலகின் தேடப்படுவோர் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார் அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன். மூன்றாவது இடத்தில் தாவூத் இப்ராகிம் உள்ளார்.

இரண்டாவது இடத்தை மெக்சிகோவின் போதை மருந்து கடத்தல் புள்ளியான ஜோகுன் கஸ்மேன் பிடித்துள்ளார்.

உலகின் டாப் தேடப்படுவோர் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் மறைந்திருப்பதாகக் கருதப்படும் ஒசாமா கடந்த 8 ஆண்டுகளாக தேடப்பட்டு வருகிறார். உலகில் எந்த மனிதரையும் உலகம் இவ்வளவு தீவிரமாக, இவ்வளவு செலவு செய்து தேடியதில்லை என்ற 'பெருமையையும்' ஒசாமா பெற்றுள்ளார்.

பாகிஸ்தானில் பதுங்கியுள்ள தாவூத் இப்ராகிம் 1993ம் ஆண்டு முதல் தேடப்பட்டு வருகிறார். மும்பை தொடர் குண்டுவெடிப்புக்குப் பின் தப்பியோடிய தாவூத், துபாயிலும் பின்னர் பாகிஸ்தானிலும் மறைந்து வாழ்ந்து வருகிறார்.

ஆயுதக் கடத்தல், தீவிரவாதத்துக்கு நிதியுதவி ஆகிய விஷயங்களில் அல்-கொய்தா, லஷ்கர்-ஏ-தொய்பாவுடன் தாவூத் கும்பலும் கைகோர்த்து செயல்பட்டு வருகிறது.

ஜோகுன் கஸ்மேன் மெக்சிகோவிலேயே பதுங்கியிருந்தாலும் அவனைப் பிடிக்க அந் நாட்டு அரசாலும் அமெரிக்காவாலும் முடியவில்லை. அமெரிக்காவுக்குள் போதை மருந்தை இன்னும் கடத்தி வருகிறது கஸ்மேன் கும்பல்.

இந்தப் பட்டியலில் இத்தாலியின் மாபியா கும்பல் தலைவரான மேட்டோ மெஸ்ஸீனா டெனாரோ நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+