காலாவதி உணவு பதுக்கல் வழக்கில் முக்கியப் புள்ளி துரைப்பாண்டி சரண்
சென்னை: சென்னை ராயபுரம் கிட்டங்கியில் காலாவதியான உணவுப் பொருளை பதுக்கி வைத்தது தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கியப் புள்ளியான துரைப்பாண்டி இன்று சென்னை கோர்ட்டில் சரணடைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி. இவர் சென்னை ராயபுரத்தில் உள்ள தனக்குச் சொந்தமான குடோனில் காலாவதி உணவுப் பொருட்களை பதுக்கினார் என்றும், சூப்பர் மார்க்கெட்டுகளில் அந்த பொருட்களை சப்ளை செய்ததாகவும் அவர் மீது புகார் எழுந்தது.
இதனையடுத்து துரைப்பாண்டியின் குடோனுக்கு சீல் வைத்த அரசு அதிகாரிகள், ராயபுரம் காவல்நிலையத்திலும் புகார் அளித்தனர். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். துரைப்பாண்டி தனது குடும்பத்தோடு தலைமறைவாகி விட்டார்.
துரைப்பாண்டியின் மோசடிச் செயல்கள் அம்பலமானதைத் தொடர்ந்து தற்போது தமிழகம் முழுவதும் போலீஸார் காலாவதி உணவை கண்டுபிடிக்கும் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் துரைப்பாண்டி மும்பையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததும், அவரை பிடிக்க தனிப்படை போலீசார் மும்பை விரைந்தனர்.
ஆனால் இன்று சென்னை ஜார்ஜ்டவுன் கோர்ட்டில் துரைப்பாண்டி சரணடைந்துள்ளார். அவரை காவலில் எடுத்து தீவிரமாக விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications