மிஸ் அமெரிக்கா பட்டம் வென்ற ரீமா ஃபாகி!
அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரைச் சேர்ந்தவர் ரீமா. இவரது பெற்றோர் லெபனானைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
மிஸ் அமெரிக்கா 2010 போட்டியில் வென்ற முதல் இஸ்லாமியப் பெண் இவரே ஆவார்.
ரீமா சிறுமியாக இருந்தபோதே அவருடைய பெற்றோர் அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்துவிட்டனர்.
ரீமாவின் வெற்றியால் டெட்ராய்ட் நகர் இடம் பெற்றுள்ள மிச்சிகன் மாகாணத்தினர் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
டெட்ராய்ட் நகரில் உள்ள டியர்பார்ன் ஹோட்டல் முன்பு கூடிய அரபு அமெரிக்கர்கள் அமெரிக்க கொடிகளை கையில் ஏந்தியபடி ஆடிப் பாடி, விடிய விடிய ரீமாவின் வெற்றியைக் கொண்டாடினர்.
மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற ரீமா, பிசினஸ் நிர்வாகப் படிப்பையும் முடித்துள்ளார். தற்போது டெட்ராய்ட் மருத்துவ மையத்தில் மார்க்கெட்டிங் எக்சிகியூட்டிவாக பணியாற்றி வருகிறார்.
சர்ச்ச்சையில் ரீமா:
மிஸ் அமெரிக்கா பட்டம் வென்ற கையோடு புதிய சர்ச்ச்சையில் சிக்கியுள்ளார் ரீமா.
2007ம் ஆண்டு டெட்ராய்ட் நகரில் உள்ள ஒரு கிளப்பில் கவர்ச்சி ஆட்டம் போட்டார் ரீமா என்பதுதான் அந்த சர்ச்சை. அந்த கிளப்பில் நடந்த நடனப் போட்டியில் கலந்து கொண்ட ரீமா, குட்டை டிரவுசர் மற்றும் பனியனுடன் 'போல் டான்ஸ்' ஆடினார்.
இப்போட்டியில், அவருக்கு முதல் பரிசு கிடைத்ததாம். பரிசுப் பணத்தை தனது பிராவில் சொருகி வைத்தபடி புன்னகையுடன் ரீமா காட்சியளிக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
வளைந்து நெளிந்து போல் டான்ஸ் ஆடிய காட்சிகள் அடங்கிய புகைப்படங்களையும் டெட்ராய்ட் இணையத்தளம் ஒன்று வெளியிட்டுள்ளது.
இதையடுத்து ரீமா குறித்த தகவல்களை சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டுள்ளனராம் 'மிஸ் அமெரிக்கா' போட்டி ஒருங்கிணைப்பாளர்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி













Click it and Unblock the Notifications