ரிலையன்ஸ், மோர் நிறுவன கடைகளில் காலாவதி உணவுப் பொருள் விற்பனை அம்பலம்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி. இவர் சென்னை ராயுபரத்தில் வசித்து வருகிறார். அங்கு கொடவுன்களை வைத்து பாக்கெட்களில் விற்பனையாகும் உணவுப் பொருட்களை மொத்தமாக வாங்கி கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார்.
சமீபத்தில் துரைப்பாண்டியன் கொடவுன் ஒன்றில் நடந்த விசாரணையில் காலாவதி உணவுப் பொருட்கள் பெருமளவில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து துரைப்பாண்டி தலைமறைவானார். அவரை போலீஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில் ஜார்ஜ்டவுன் கோர்ட்டில் அவர் சரணடைந்தார்.
அவரை தற்போது போலீஸார் காவலில் எடுத்து வைத்து 3 நாட்களாக விசாரித்து வருகின்றனர்.
3வது நாளாக நடந்தவிசாரணையில், பல்வேறு பரபரப்பான தகவல்களைக் கொடுத்துள்ளார் துரைப்பாண்டி.
சென்னையில் பிரபலமாக உள்ள ரிலையன்ஸ் மற்றும் மோர் நிறுவன கடைகளிலிருந்துதான் தான் காலாவதியான உணவுப் பொருட்களை வாங்கி விற்று வந்ததாக கூறியுள்ளார் துரைப்பாண்டி. கடந்த ஒரு வருடமாக இவ்வாறு செய்து வந்ததாகவும் அவர்தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ரிலையன்ஸ் மற்றும் மோர் நிறுவன கடைகளில் ரெய்டு நடத்தவும், அவற்றின் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தவும் ராயபுரம் போலீஸார் தீர்மானித்துள்ளனர்.மேலும் இவர்களின் வங்கிக் கணக்குளை பரிசோதிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
சோதனையை எதிர்த்து வணிகர்கள் ஆர்ப்பாட்டம்:
இதற்கிடையே, காலாவதியான உணவுப் பொருட்களை கண்டுபிடிக்க அதிகாரிகள் நடத்தும் சோதனையைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை மெமோரியல் ஹால் அருகே தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை யின் த.வெள்ளையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. காலாவதி உணவு பொருள் சோதனையில் அதிகாரிகளின் அத்துமீறல் கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் வணிகர் சங்க மாநில தலைவர் த.வெள்ளையன் பேசுகையில்,
தமிழ்நாடு முழுவதும் மளிகை மற்றும் உணவுப் பொருள்களை வியாபாரம் செய்துவரும் கடைகளில் காலாவதி பொருட்களை கைப்பற்றுகிறோம் என்ற பெயரில் அதிகாரிகள் அத்துமீறி செயல்படுகின்றனர். வணிகர்களை சமூக விரோதிகள் போல் பாவித்து பொய் வழக்கு போடுகின்றனர். காலாவதி பொருட்களை விற்பதாக கூறி கடையில் உள்ள வெல்லம், புளி, பருப்பு போன்றவற்றை கைப்பற்றுகின்றனர்.
தரமான பொருட்களை வணிகர்கள் பிளாஷ்டிக் கவர்களில் சுத்தமாக, சுகாதாரமாக பொட்டலம் செய்து வைத்து இருப்பதை கூட கைப்பற்றுகின்றனர். இந்த அத்துமீறிய செயல் சில்லரை வியாபாரிகளின் மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல் என்றே கருதுகிறோம்.
எனவே தமிழக முதல்வர் இதில் தலையிட்டு உடனடியாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications