சோனியாவின் கார்களை தாமதித்த 2 ரயில்வே ஊழியர்கள் சஸ்பெண்ட்
ரேபரேலி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ரேபரேலி மக்களவைத் தொகுதியில் பயணம் செய்தபோது, அவரது காரை பின்தொடர்ந்து வந்த தொண்டர்களின் வாகனங்களை தாமதப்படுத்தியதாக 2 ரயில்வே ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
தனது மக்களவைத் தொகுதியான ரேபரேலியில் சில வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்க சோனியா காரில் சென்றார். அவரது காரை பின்தொடர்ந்து வந்த தொண்டர்களின் கார்கள் ஜலால்பூர் காய் ரயில் நிலையம் அருகே ரயில்வே கேட்டில் சிக்கிக் கொண்டன.
ரயிலே வராத நிலையில் அந்த ரயில்வே கேட் மூடப்பட்டு கார்கள் நிறுத்தப்பட்டன.
இதையடுத்து பணியில் அலட்சியமாக இருந்ததாக ரயில்வே கேட் கீப்பர் உள்ளிட்ட இருவரை பணியிலிருந்து இடைநீக்கம் செய்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தகவல் அளிப்பதில் தாமதம்-அதிகாரிக்கு அபராதம்:
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒருவருக்கு தகவல் அளிப்பதில் ஏற்பட்ட தாமதத்துக்காக அதிகாரிக்கு ரூ.9,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
2008-09ம் கல்வியாண்டில் பல்கலைக்கழகத் தேர்வில் மாணவர்கள் தேர்வு எழுதியது தொடர்பாக சில விவரங்களை ஹேமந்த் குமார் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தனக்குத் தர வேண்டும் என்று கேட்டிருந்தார்.
ஹரியாணா மாநில பொது தகவல் அதிகாரியும் சதீஷ் கல்வியியல் கல்லூரியின் முதல்வருமான ஆர்.கே.பாகரிடம் இது தொடர்பான கோரிக்கை சென்றது. ஆவணங்களைப் பரிசீலித்த பின்னர், இதற்கு விவரங்கள் கூறாமலும், பதில் ஏதும் தராமலும் 38 நாள்களாக அவர் இழுத்தடித்து தாமதம் செய்தார்.
ஆனால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுதாரருக்கு 30 நாள்களுக்குள் பதில் அளிக்கப்பட வேண்டும்.
பதில் அளிப்பதற்கு தாமதம் ஏற்பட்ட தொடர்பான புகாரை விசாரித்த மாநில தகவல் ஆணையர் மீனாட்சி அனந்த், முழுமையான தகவல்களை குறித்த காலத்துக்குள் அளிக்காத அதிகாரிக்கு ரூ.9,500 அபராதம் விதித்தார்.
இந்த அபராதத் தொகையை பாகரின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்து தகவல் ஆணையத்தின் கணக்கில் இரு மாதங்களுக்குள் டெபாசிட் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications