மருத்துவ படிப்பிற்கான 'கட்-ஆப்' மார்க் 0.25 குறையும்!
சென்னை: எம்பிபிஎஸ் படிப்பில் சேருவதற்கான 'கட்-ஆப்' தகுதி மதிப்பெண் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 0.25 குறைய வாய்ப்புள்ளது.
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த 14ம் தேதி வெளியாயின. இதையடுத்து மருத்துவம், என்ஜினீயரிங் மற்றும் பிற படிப்புகளில் சேர மாணவர்கள் போட்டா போட்டி போட்டு வருகின்றனர்.
இந்த வருடம் பிளஸ்-2 கணிதத் தேர்வில் 200-க்கு 200 மார்க் பெற்றோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் என்ஜினீயரிங் படிப்பில் சேர 'கட்-ஆப்' மதிப்பெண் 0.5 முதல் 1.0 வரை குறையும் என்று தெரிகிறது.
அதே போல மருத்துவ படிப்பிற்கும் 'கட்-ஆப்' மார்க் 0.25 குறையும் என்று தெரிகிறது.
மருத்துவப் படிப்புக்கான 'கட்-ஆப்' மதிப்பெண்ணை பொறுத்தவரை கடந்த வருடத்தைவிட இந்த வருடம் ஒவ்வொரு 'கட்-ஆப்' மார்க்குக்கும் கூடுதலாக 20 மாணவர்கள் உள்ளனர்.
2 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் வந்துள்ளதால் தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடங்கள் 170 அதிகரித்து மொத்தம் 1,653 இடங்கள் உள்ளன.
அதில் பொது பிரிவினருக்கான இடங்கள் 80 அதிகரிக்கப்பட்டு மொத்தம் 513 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பிற்படுத்தப்பட்டோருக்கு 438 இடங்களும், முஸ்லிம்களுக்கு 58 இடங்களும், மிகவும் பிற்பட்டோருக்கு 329 இடங்களும், ஆதிதிராவிடர்களுக்கு 247 இடங்களும், அருந்ததியினருக்கு 51 இடங்களும், பழங்குடியினருக்கு 17 இடங்களும் உள்ளன.
15,000 விண்ணப்பங்கள் வினியோகம்:
இந் நிலையில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக கடந்த 4 தினங்களில் 15,000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் விற்றுத் தீர்ந்துள்ளன.
மே 31ம் தேதி வரை இந்த விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications