மசூதி இடிப்பு-அத்வானிக்கு எதிரான சதி வழக்கு: சிபிஐ கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்
லக்னெள: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக தலைவர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோரை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக பாஜக தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், வினய் கத்யார், சிவசேனா தலைவர் பால் தாக்கரே உள்ளிட்ட 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ரேபரேலியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இவர்களி மீது கிரிமினல் சதி உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்திருந்தது.
ஆனால், இந்த வழக்கில் பாஜக தலைவர்கள் மீதான கிரிமினல் நடவடிக்கைகளை ரத்து செய்து 2001ம் ஆண்டு மே மாதம் 4ம் தேதி தள்ளுபடி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரி்த்த நீதிபதி நீதிபதி அலோக் குமார் சிங்,அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
தனது 44 பக்க தீர்ப்பில், சிறப்பு நீதிமன்றம் சரியான தீர்ப்பையே வழங்கியுள்ளது. அந்தத் தீர்ப்பை திருத்தவோ அல்லது அதில் குறுக்கிடுவதற்கோ எந்த முகாந்திரமும் இல்லை. எனவே அந்த உத்தரவில் தலையிட முடியாது என்று கூறியுள்ளார்.
ஆனாலும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் பாஜக தலைவர்கள் ஆட்சேபகரமாக பேசியதாக ரேபரேலி நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications