பேஸ்புக், யூடியூப்-பைத் தொடர்ந்து ட்விட்டரையும் தடை செய்தது பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்: பேஸ்புக், யூடியூப் ஆகியவற்றை தடை செய்த பாகிஸ்தான் இன்று முதல் ட்விட்டரையும் தடை செய்து விட்டது.
நாடு முழுவதும் ட்விட்டர் தளத்துக்கான சேவையை இன்டர்நெட் சேவையாளர்கள் துண்டித்ததால், ட்விட்டர் தளத்துக்குள் போக முடியாமல் பாகிஸ்தானியர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.
ட்விட்டர் தளத்துக்குள் போக முயன்றபோது, "this site is restricted" என்ற தகவலை பாகிஸ்தானியர்கள் காண முடிந்தது.
கடந்த 2 நாட்களாக பேஸ்புக், யூடியூப் ஆகியவற்றை தடை செய்து வந்த பாகிஸ்தான் தொலைத் தொடர்புத் துறை தனது நடவடிக்கையின் ஒரு பகுதியாக ட்விட்டருக்கும் இன்று பூட்டுப் போட்டது.
இஸ்லாம் மத விரோத கருத்துக்கள் இந்த இணையதளங்களில் இடம் பெற்றிருப்பதால் இவை தடை செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தொலைத் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.
நபிகள் நாயகத்தை அவதூறாக விமர்சித்து பேஸ்புக்கில் படங்கள் இடம் பெற்றிருந்தன. இதை எதிர்த்து லாகூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த இணையதளத்தை தடை செய்யுமாறு லாகூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் விளைவாக பேஸ்புக்கை தடை செய்தது பாகிஸ்தான் அரசு. தொடர்ந்து யூடியூபையும் தடை செய்தது. இந்த நிலையில் இன்று ட்விட்டருக்கும் தடை போடப்பட்டு விட்டது.
பாகிஸ்தான் தொலைத் தொடர்புத்துறையினரால் இதுவரை 450 இணையத் தள முகவரிகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications