ஜெயலலிதா 24ம் தேதி திருப்பதி கோவிலில் வழிபாடு
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வருகிற 24ம் தேதி திருப்பதி சென்று வழிபாடு நடத்தவுள்ளார்.
ஜெயலலிதா கடந்த 17 ந்தேதி காளஹஸ்தி சிவன் கோவிலுக்கு சென்று ருத்ரா பிஷேக சிறப்பு பூஜையில் பங்கேற்றார். பின்னர் சென்னை திரும்பினார். இந்த நிலையில் நாளை மறுதினம் அவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார்.
இது குறித்து சித்தூர் மாவட்ட கலெக்டர் சேஷாத்திரி கூறுகையில்,
வருகிற 24 ந் தேதி காலை 10 மணிக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு காலை 10.45 மணிக்கு திருப்பதி நகராட்சி மைதானத்தில் உள்ள தளத்தில் இறங்குகிறார்.
அங்கிருந்து திருமலைக்கு காரில் செல்கிறார். அங்கு பத்மாவதி விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார்.
பிறகு ஏழுமலையான் கோவிலுக்கு செல்கிறார். அங்கு சாமி தரிசனம் முடித்து பிற்பகல் 1 மணிக்கு காரில் புறப்பட்டு திருப்பதி வந்து அங்கிருந்து ஹெலிகாப்டரில் சென்னை வருகிறார்.
ஜெயலலிதாவின் வருகையை முன்னிட்டு இசட் பிளஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications