சமையல் எண்ணெய், மளிகைப் பொருள்கள் விலை கடும் உயர்வு!
சென்னை: கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய சமையல் எண்ணெய் போன்றவற்றின் விலை கடந்த வாரத்தை விட இந்த வாரம் அதிகரித்துள்ளது.
1 கிலோ பாமாயில் கடந்த வாரம் ரூ.39-க்கு விற்றது. இப்போது அது ரூ.42 ஆக உயர்ந்துள்ளது.
சன் பிளவர் ஆயில் ரூ.57-ல் இருந்து ரூ.59 ஆகவும், கடலை எண்ணெய் கிலோ ரூ.72-ல் இருந்து 74 ஆகவும், நல்லெண்ணெய் கிலோ ரூ.105-ல் இருந்து ரூ.110 ஆகவும், சாதா நல்லெண்ணெய் ரூ.60-ல் இருந்து ரூ.65 ஆகவும் உயர்ந்துள்ளது.
தேங்காய் எண்ணெய் கிலோ ரூ.70-ல் இருந்து ரூ.75 ஆகவும், சாதா தேங்காய் எண்ணெய் ரூ.60-ல் இருந்து ரூ.65 ஆகவும் உயர்ந்து விட்டது. வனஸ்பதி கிலோ ரூ.48-ல் இருந்து ரூ.52 ஆகியுள்ளது.
சர்வதேச மார்க்கெட்டில் எண்ணெய் விலை அதிகரித்ததால் விலை ஏறி வருவதாக கூறப்பட்டுள்ளது. பாமாயில், சன்பிளவர் ஆயில் போன்றவை மலேசியா போன்ற நாடுகளிலிருந்துதான் இறக்குமதியாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
எண்ணெய் மட்டுமல்லாது, வெல்லம், மிளகு, பூண்டு போன்றவற்றின் விலைகளும் வெகுவாக உயர்ந்துள்ளது.
சேலம் வெல்லம் 1 கிலோ ரூ.30-ல் இருந்து ரூ.34 ஆகவும், வேலூர் வெல்லம் ரூ.34-ல் இருந்து ரூ.38 ஆகவும், அச்சு வெல்லம் ரூ.40-ல் இருந்து ரூ.44 ஆகவும் உயர்ந்துள்ளது.
மிளகு முதல் ரகம் கிலோ ரூ.190-ல் இருந்து ரூ.210 ஆகவும் 2-ம் ரகம் ரூ.160-ல் இருந்து ரூ.175 ஆகவும் ஏறி உள்ளது.
பூண்டு முதல் ரகம் ரூ.70-ல் இருந்து ரூ.90 ஆகவும், 2-ம் ரகம் ரூ.60-ல் இருந்து ரூ.70 ஆக உயர்ந்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications