மருதையாற்றில் அணை கோரி அரியலூரில் 24ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்
சென்னை: பெரம்பலூர் மாவட்டம் மருதையாற்றின் குறுக்கே அணை கட்ட வலியுறுத்தி அதிமுக சார்பில் அரியலூரில் 24ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பெரம்பலூர் மாவட்டம் மருதை ஆற்றின் குறுக்கே அணையை கட்டி வாய்க்கால் மூலம் சுக்கிரன் ஏரிக்கு பாசன நீர் கொண்டு செல்ல எனது ஆட்சிக் காலத்தில் 2005 ஆம் ஆண்டு பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவரால் ஒத்தி சைவு அளிக்கப்பட்டது. பின்னர் கண்காணிப்பு பொறியாளரால் மதிப்பீடு இறுதி செய்யப்பட்டு 2007 ஆம் ஆண்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தத் திட்டம் நிறை வேற்றப்பட்டால் 2050 ஹெக் டேர் நஞ்சை நிலமும், மறை முகமாக 2000 ஏக்கர் நிலமும் பாசனம் பெறுவதோடு, நிலத்தடி நீர்மட்டமும் உயரும் வாய்ப்பு உள்ளது. மேலும் இத்திட்டத்தினால் 3702 மெட்ரிக்டன் கூடுதல் உணவு உற்பத்தி கிடைக்கும். எனது ஆட்சிக் காலத்தில் ஆய்வு செய்யப்பட்ட திட்டம் என்பதால் இதை தி.மு.க. அரசு கிடப்பில் போட்டுள்ளது.
இதே போன்று, அரியலூர் நகராட்சி பாதாள சாக்கடைத்திட்டத்திற்கு ஒப்பந்தப்புள்ளி கோருவதற்கான தேதி குறிப்பிடப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இது நாள் வரை ஒப்பந்தப் புள்ளி கோரப்படவில்லை. அதே சமயத்தில் அரியலூர் நகராட்சிப் பகுதியில் குடியிருக்கும் அனைவரிடமும் பாதாள சாக்கடைத் திட்டத்திற்கான டெபாசிட் தொகையை நகராட்சி நிர்வாகம் வசூலித்து வருகிறது.
மேலும், அரியலூர் நகராட்சியில் கழிவுநீர் வடிகால் வசதி இல்லாததன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, கொசு உற்பத்தி பெருகி, மூளைக்காய்ச்சல், மலேரியா போன்ற பல்வேறு நோய்களுக்கு அரியலூர் நகராட்சி மக்கள் ஆளாக்கப்பட்டு இருப்ப தாகவும், கொள்ளிடம் குடிநீர் தற்போது சரியாக விநியோகிக்கப்படாததன் காரணமாக உப்பு நீரைக் குடிக்கும் அவல நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு உள்ள தாகவும், இதனால் பொது மக்களின் உடல் நலம் பாதிக்கப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன.
அரியலூர் நகராட்சியின் மோசமான நிர்வாகத்தைக் கண்டித்தும், மேற்படி திட்டங்களை உடனடியாக நிறை வேற்றுவதோடு, கொள்ளிடம் குடிநீர் வழங்க வலியுறுத்தியும் அ.தி.மு.க. பெரம்பலூர் மாவட்டக் கழகத்தின் சார்பில், 24.5.10 (திங்கட்கிழமை) அன்று காலை 10 மணி அளவில், அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டனப்போராட்டம் நடைபெறும்.
இதில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் டி. ஜெயக்குமார், எம்.எல்.ஏ., தலைமையிலும், பெரம்பலூர் மாவட்டக் கழகச் செயலாளர் ப.இளவழகன் முன்னிலையிலும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications