அஜ்மல் கசாப் இனி கைதி எண் சி-7096
மும்பை: மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அஜ்மல் கசாப்புக்கு எண் ஒதுக்கப்பட்டுள்ளது. இனிமேல் அந்த எண்ணைக் கொண்டுதான் கசாப் அழைக்கப்படுவான்.
தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து கசாப்புக்கு எண் ஒதுக்கப்பட்டுள்ளது. கசாப்பின் எண் கைதி எண் சி-7096 ஆகும். இனிமேல் இந்த எண்ணின் பெயரில்தான் கசாப் அழைக்கப்படுவான்.
கொலைக் குற்றங்களில் ஈடுபட்டுள்ள கைதிகள் ஆர்தர் சாலை சிறைச்சாலையின் சி பிரிவில் அடைக்கப்பட்டுள்ளனர். அதே பகுதியில் கசாப்பும் அடைக்கப்பட்டுள்ளால் அவனது எண்ணுடன் சி என்ற பிளாக் எழுத்தின் பெயரையும் சேர்த்து எண் கொடுத்துள்ளனர்.
3 மாதம் வரையிலான தண்டனை பெற்ற கைதிகள் ஏ பிரிவாகவும், ஐந்து ஆண்டு வரை தண்டனை பெற்றவர்கள் பி பிரிவாகவும் கருதப்படுவர்.
கசாப்புக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவனுக்கு சிறையில் வேலை எதுவும் கொடுக்கப்பட மாட்டாது. கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு மர வேலை உள்ளிட்ட சில வேலைகள் தரப்படும். அதற்கு ஊதியமும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மரண தண்டனை கைதிகளுக்கு வேலை தரப்பட மாட்டாது.
தற்போதைக்கு கசாப்புக்கு உள்ள ஒரே வேலை அவனது உடைகளை அவனே துவைத்துக் கொள்வதுதான். காரணம், லாண்டரிக்குப் போட அவனிடம் பணம் இல்லாததால், அவனே அவனது துணிகளை துவைத்துக் கொள்ள வேண்டும்.
22 வயதான கசாப், மரண தண்டனை விதிக்கப்பட்ட பிறகு சிறையில் தனிமையாக உணர்கிறானாம். தனது அறையின் மூலையிலேயே எப்போதும் அமர்ந்திருக்கிறானாம்.
தன்னை யாராவது வந்து பார்க்க மாட்டார்களா, உறவினர்கள் வர மாட்டார்களா என தவிப்புடன் உள்ளானாம். சிறைக் காவலர்களிடம் இதுகுறித்து அடிக்கடி கேட்டபடி உள்ளானாம்.
காலையில் 7 மணிக்கு எழுந்திருக்கும் கசாப், புத்தங்கள் மற்றும் திருக்குரான் போன்றவற்றை வாசிக்கிறான். தினசரி ஐந்து முறை தவறாமல் தொழுகையும் நடத்துகிறான்.
இதற்கிடையே, கசாப்புக்கு அளிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை உறுதி செய்வதற்கு வசதியாக மும்பை தனி கோர்ட் வழங்கிய தீர்ப்பு நகலை, அனைத்து ஆவணங்களுடன் பாம்பே உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றனவாம்.
மும்பை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட மற்ற இருவரான பஹீம் அன்சாரி மற்றும் சபாபுதீன் அகமது ஆகியோர் தொடர்நது ஆர்தர் சாலை சிறையிலேயே அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது உ.பியில் வேறு வழக்குகள் உள்ளதால், விரைவில் இந்த இருவரையும் உ.பி. போலீஸாரிடம் மும்பை போலீஸார் ஒப்படைக்கவுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications