காதலித்து ஏமாற்றியதாக சேரன்மகாதேவி சப்-கலெக்டர் மீது பெண் புகார்
நெல்லை: சேரன்மகாதேவி சப்-கலெக்டர் தன்னைக் காதலித்துவிட்டு ஏமாற்றி விட்டதாக இளம்பெண் ஒருவர் ஆந்திரா உள்துறை அமைச்சரிடம் புகார் கொடுத்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள புருஷோத்தம்பள்ளியை சேர்ந்தவர் ஜெகதீ வரலெட்சுமி. தமிழகத்தில் பணிபுரியும் ஐஏஎஸ் அதிகாரி ஓருவர் தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி விட்டதாகவும், அவரையை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படியும் ஆந்திரா உள்துறை அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டியிடம் ஜெகதீ புகார் செய்தார். பின்னர் அவருடைய உத்தரவின் பேரி்ல் நமிஸ்த்ரகூடம் போலீஸிலும் புகார் கொடுத்தார்.
சர்ச்சையில் சிக்கியுள்ள சப் கலெக்டரின் பெயர் வீரராகவ ராவ். ஆந்திராவைச் சேர்ந்தவர். இந்த சர்ச்சை குறித்து ராவ் கூறுகையில், சிவில் சர்வீஸ் பயிற்சிக்காக நண்பர் ஒருவர் மூலம் ஜெகதீ எனக்கு அறிமுகம் ஆனார். அவரை நான் காதலிக்கவில்லை. அவருக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.
ஆனாலும் எஸ்எம்எஸ் மூலமாகவும், போனிலும் என்னை தொடர்பு கொண்டு திருமணம் செய்து கொள்ளுமாறு என்னை ஜெகதீ வன்புறுத்தினார். என்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என ஆலோசனை கூறியும் ஜெகதீ விடவி்ல்லை. இதற்கான அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளன.
இது தொடர்பாக நெல்லை எஸ்பி ஆஸ்ரா கர்க்கிடம் எழுத்து மூலமாக புகார் தெரிவித்துள்ளேன். எனக்கும், எந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்படவில்லை. அவர் கூறுவது அனைத்தும் பொய். என்னிடம் உள்ள ஆதாரங்களை வைத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் என்றார்.












Click it and Unblock the Notifications