சோனியா அறக்கட்டளைக்கு போன அரசு நிதி ரூ. 5 கோடி!

அதைவிடக் கொடுமையாக இந்த அறக்கட்டளையில் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஒரு அறங்காவலராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய தணிக்கை அதிகாரியின் சிறப்பு ஆடிட்டிங்கில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளது.
மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள நேரு நினைவு மியூசியம் மற்றும் நூலகம் இந்த நிதியை ஜவஹர்லால் நேரு நினைவு நிதி அறக்கட்டளைக்கு அளித்துள்ளது. இந்த அறக்கட்டளை முழுக்க முழுக்க தனியாரால் நிர்வகிக்கப்படும் அமைப்பாகும். இதில் ராஜிவ் காந்தியின் நண்பரான சுமன் துபே செயலாளராக உள்ளார்.
இது முழுக்க முழுக்க சட்ட விரோதமான செயல் என்று தணிககை அதிகாரியின் 43 பக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த ரூ. 5 கோடியை ஜவஹர்லால் நேரு நினைவு அறக்கட்டளை தனது கணக்கில் பிக்சட் டெபாசிட்டில் போட்டு வைத்து 'அடை காத்துள்ளது'. அதே நேரத்தில் ஆண்டுதோறும் ஆய்வாளர்களுக்கு நேரு நினைவு மியூசியம் வழங்க வேண்டிய உதவி நிதியை கடந்த 3 ஆண்டுகளாக வழங்கவே இல்லை. (அந்தப் பணத்தை தான் நேரு நினைவு நிதி அமைப்புக்கு தந்துவிட்டனர் போலும்).
மேலும் நேரு மியூசியத்தை நவீனமமாக்கும் பணிக்காக ஜெய்மாலா ஐயர், சந்தனா டெ ஆகிய இருவருக்கும் மீண்டும் மீண்டும் ரூ. 20 கோடி வரை பணம் தரப்பட்டுள்ளது.
செய்த வேலையையே இவர்கள் திரும்பத் திரும்ப செய்ததாக கணக்குக் காட்டியுள்ளனர. அதை ஏன் அவர்கள் திரும்பத் திரும்பச் செய்தனர். தற்கு ஏன் மீண்டும் மீண்டும் பணம் தரப்பட்டது என்பது தெரியவில்லை என்றும் தணிக்கை அதிகாரியின் அறிக்கை கேள்வி எழுப்பியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications