சகோதரர்கள் சமரசம்-அனில் அம்பானி நிறுவன பங்குகள் 'ஜிவ்'!
Subscribe to Oneindia Tamil

முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானிகளின் சமரசப் போக்கு மற்றும் புதிய ஒப்பந்தம் காரணமாக இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் சென்செக்ஸ் 260 புள்ளிகள் அதிகரித்து 16700 புள்ளிகளாகவும், நிஃப்டி 74 புள்ளிகள் அதிகரித்து 5006 புள்ளிகளாகவும் உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் மற்றும் அனில் அம்பானி குழுமங்களான ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரெக்சர், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் பவர் மற்றும் ரிலையன்ஸ் நேச்சுரல் ரிசோர்சஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் கணிசமாக உயர்ந்து கைமாறின.
குறிப்பாக, எரிவாயு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் பெரும் சரிவுக்குள்ளான அனில் அம்பானியின் ஆர்என்ஆர்எல் பங்குகள் விலை 21 சதவிகிதம் உயர்ந்து விலை போனது. கடந்த வெள்ளியன்று ரூ 44 க்கு விற்ற இந்தப் பங்குகள் இன்று காலை ரூ 54 வரை விலைபோயின.












Click it and Unblock the Notifications