ஜெ. காரை மறித்து அதிமுகவினர் போராட்டம்: மாவட்ட செயலாளரை நீக்க கோரிக்கை
சென்னை: வேலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரை நீக்க கோரி, அதிமுகவினர் ஜெயலலிதா வீட்டு முன் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரது காரையும் மறித்தனர்.
வேலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக உள்ள வீரமணி, கட்சி நிர்வாகிகளை அவதூறாகப் பேசுவதாகக் கூறி வேலூர் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த சுமார் 100 அதிமுக நிர்வாகிகள் போயஸ் கார்டனின் உள்ள அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் வீடு முன் நேற்றிரவு கூடி, முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இவர்களுக்கு அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ. பாண்டுரங்கன், முன்னாள் அமைச்சர் வடிவேல், முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
ஜெயலலிதா வீட்டு முன்பு நின்று கொண்டு அவர்கள் மாவட்ட செயலாளரை நீக்க கோரி கோஷங்களை எழுப்பினர். அப்போது ஜெயலலிதா ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர் வெளியே சென்றிருந்தார்.
இரவு 7.15 மணியளவில் ஜெயலலிதா போயஸ் கார்டன் திரும்பி வந்தபோது, அதிமுகவினர் அவர் கார் முன்பு நின்று கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தொண்டர்களை அமைதிப்படுத்தி ஜெயலலிதா கார் வீட்டிற்குள் செல்ல வழி ஏற்படுத்தினர்.
வீட்டிற்குள் சென்ற ஜெயலலிதா போராட்டத்தில் ஈடுபட்ட கட்சி நிர்வாகிகளை உள்ளே வருமாறு அழைத்தார்.
இதையடுத்து முன்னாள் அமைச்சர் வடிவேலு, முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன் தலைமையில் மொத்தம் 6 பேர் ஜெயலலிதாவை சந்தித்தனர். அப்போது, அவர்கள் மாவட்ட செயலாளரை மாற்ற கோரி கோரிக்கை மனு கொடுத்தனர்.
மாவட்டத் தலைவரான வீரமணி கட்சி நிர்வாகிகள் யாரையும் மதிப்பதில்லை. கட்சி தொண்டர்களின் இல்ல விழாக்கள், பொது கூட்டங்கள் போன்றவற்றில் கலந்து கொள்வதில்லை. இப்படியே சென்றால் வேலூர் மேற்கு மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதியிலும் அதிமுக தோல்வியை சந்திக்க நேரிடும் என்று புகார் தெரிவித்தனர்.
முன்னதாக நேற்று காலை ஜெயலலிதா ஹெலிகாப்டர் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்துக்குச் சென்று, அங்கிருந்து கார் மூலம் திருப்பதி கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்துவிட்டுத் திரும்பினார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications