விமான விபத்து-மாற்றி எடுத்துச் செல்லப்பட்ட உடல்!
மங்களூர்: மங்களூர் விமான விபத்தில் இறந்தவரின் உடலை அடையாளம் தெரியாமல் வாங்கிச்சென்ற உறவினர்கள் இறுதிச்சடங்கு நடைபெறும் போது உண்மை தெரிந்ததால் அந்த உடலை மீண்டும் மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.
மங்களூர் பாஜ்பே சர்வதேச விமான நிலையத்தில் நடந்த விமான விபத்தில் 158 பேர் பலியாகியுள்ளர். இதில் 22 உடல்கள் மட்டும் இன்னும் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்து கரிக்கட்டையாகிவிட்டன. இவர்களது டிஎன்ஏ மாதிரிகள் ஹைதரபாத் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த 22 பேரில் 20 பேர் ஆண்கள் என்றும், ஒருவர் பெண் என்றும், இன்னொன்று குழந்தையின் உடல் என்றும் தெரிய வந்துள்ளது. ஆனாலும் ஹைதரபாத் ஆய்வக முடிவு வந்தால் தான் அவரை யாருடைய உடல்கள் என்பது அடையாளம் காண முடியும்.
இந் நிலையில் ஒரு உடலுக்கு 3 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இதனால் டி.என்.ஏ. பரிசோதனை முடிவு வரும் வரை காத்திருக்குமாறு அதிகாரிகள் கூறிவிட்டனர்.
அதேபோல உடலை மாற்றி வாங்கிச் சென்ற சம்பவமும் நடந்துள்ளது. மங்களூர் சக்தி நகர் பகுதியைச் சேர்ந்த இக்னேஷியஸ் டிசோசா (49) விமான விபத்தில் இறந்துவிட்டார்.
இவரது உறவினர்கள் மங்களூர் அரசு வென்லாக் மருத்துவமனையில் இருந்த ஒரு உடலைக் காட்டி அது இக்னேஷியஸ் டிசோசாதான் என்று கூறி வாங்கிச் சென்றனர்.
டிசோசாவின் வீட்டில் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன. அப்போதுதான் அது இஸ்லாமியர் ஒருவரின் உடல் என்பது தெரிய வந்தது. இதையடுத்து இறுதிச் சடங்குகளை பாதியில் நிறுத்திவிட்டு, அந்த உடலை மருத்துவமனையில் கொண்டு வந்து திருப்பிச் சேர்த்தனர்.
உயிர் தப்பியவர்களுக்கு ஏர் இந்தியா வேலை:
இந் நிலையில் இந்த விபத்தில் உயிர் தப்பிய 8 பேருக்கும் வேலைவாய்ப்பு வழங்க ஏர் இந்தியா நிறுவனம் முன் வந்துள்ளது. அவர்கள் விரும்பினால் பணியில் சேரலாம் என்று அறிவித்துள்ளது.
அதே போல பலியானவர்கள் குடும்பங்களுக்கு முதல்கட்டமாக தலா ரூ. 10 லட்சம் வழங்கப்படும் என்றும் ஏர் இந்தியா அறிவித்துள்ளது. இறந்தவர்களின் குடும்பத்துக்கு அதிகபட்சமாக ரூ. 75 லட்சம் வரை நஷ்டஈடு தரப்படும் என்று விமானத்துறை அமைச்சர் பிரபுல் படேல் அறிவித்துள்ளார்.
பிராங்பர்ட் கொண்டு செல்லப்பட்ட பைலட் உடல்:
இதற்கிடையே விபத்தில் பலியான பைலட் ஸ்லாட்கோ க்ளுசிகாவி்ன் (53) உடல் ஏர் இந்தியா விமானம் மூலம் பிராங்பர்ட் கொண்டு செல்லப்பட்டது.
செர்பியாவின் பெல்கிரேட் நகரைச் சேர்ந்த இவர் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர். 2 ஆண்டுகளாக ஏர் இந்தியாவில் பணியாற்றி வந்தார்.
பிராங்பர்ட்டில் இருந்து அவரது உடல் செர்பியாவுக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications