விமான விபத்து: 3 நாள் தேடலுக்குப் பின் 'டிஜிட்டல் பிளைட் டேட்டா ரெக்கார்டர்' மீட்பு!

முன்னதாக கருப்புப் பெட்டியின் ஒரு பாகமான காக்பிட்வாய்ஸ் ரெக்கார்டர் (சி.வி.ஆர்.) மட்டுமே கிடைத்தது. இதில் விமானியின் அறையில் நடக்கும் பேச்சுக்கள் பதிவாகியிருக்கும். விமானிகளிடையிலான உரையாடல், விமானிகளுக்கும் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் இதில் பதிவாகியிருக்கும்.
ஆனால், இன்னொரு பகுதி டிஜிட்டல் பிளைட் டேட்டா ரெக்கார்டர் (எப்.டி.ஆர்.) கிடைக்கவில்லை.
இதில் தான் விமானம் கிளம்பியது முதல் தரையிறங்கியது வரையிலான அத்தனை தொழில்நுப்ட விவகாரங்களும் பதிவாகும். விமானம் எந்த நொடியில் எந்த வேகத்தில் பறந்தது, எந்த உயரத்தில் பறந்தது, என்ஜின் உள்பட விமானத்தின் அனைத்துக் கருவிகளின் செயல்பாடுகள், அதில ஏற்பட்ட குறைபாடுகள் என விமானத்தின் அனைத்து விவரங்களும் பதிவாகும்.
இது கிடைத்தால் தான் விபத்துக்கான காரணத்தை முழுமையாக ஆராய முடியும் என்ற நிலையில் தேடல் இரவு பகலாகத் தொடர்ந்தது.
இந் நிலையில் இன்று காலை 10 மணிக்கு இந்தப் பாகம் மீட்கப்பட்டது. இது மிக பலத்த சேதமடைந்துள்ளது. ஆனாலும் இதில் உள்ள 'டேப்'கள் பத்திரமாக உள்ளதால் முழு விவரங்களையும் சேகரித்துவிட முடியும் என விமானப் போக்குவரத்துத்துறை டைரக்டர் ஜெனரல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து இது சிறப்பு விமானத்தில் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்குள்ள விமானத்துறையின் ஆய்வகத்தில் இதில் உள்ள விவரங்கள் ஆராயப்படும். இதிலிருந்து விவரங்கள் சேகரிக்க பல வாரங்கள் ஆகும்.
இதை முழுமையாக ஆராய தேவைப்பாட்டால் அமெரிக்காவுக்கு அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications