உலகம் முழுவதும் வேகமாய் குறையும், குழந்தைகள் இறப்பு விகிதம்!

இந்தியாவில் குழந்தைகள் இறப்பு விகிதம் 4 முதல் 5 சதவீதம் வரை சரிந்துள்ளது.
வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் Institute for Health Metrics and Evaluation (IHME) பிரிவு நடத்திய உலகளாவிய ஆய்வில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன. அதன் ஆய்வறிக்யை லேன்செட் இதழ் நேற்று வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
உலகம் முழுவதுமே குழந்தைகள் இறப்பு விகிதம் முன்பு நினைத்ததைவிட வேகமாகவே குறைந்து வருகிறது. 1990ம் ஆண்டில் உலகம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட 1.2 கோடி குழந்தைகள் இறந்தனர்.
இது 2010ம் ஆண்டில் 77 லட்சமாகக் குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது 35 சதவீத சரிவாகம். இந்த 77 பேரில் 31 லட்சம் பேர் பிறந்து 28 நாட்களே ஆன குழந்தைகளாக இருப்பர், 23 லட்சம் பேர் 28 நாட்களைத் தாண்டிய குழந்தைகளாக இருப்பர், மேலும் 23 லட்சம் பேர் 1 முதல் 4 வயதுடைய குழந்தைகளாக இருப்பர்.
இந்தியாவில் குழந்தைகள் இறப்பு விகிதம் ஆண்டுதோறும் 4 முதல் 5 சதவீதம் வரை சரிந்து வருகிறது.
1970ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை 187 நாடுகளில் பதிவான குழந்தைகள் இறப்புகள் குறித்த விவரங்களை சேகரித்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஒட்டுமொத்தத்தில் ஆண்டுதோறும் உலகம் முழுவதும் குழந்தைகள் இறப்பு 2 சதவீதம் குறைந்து வருகிறது. இதை 2015ம் ஆண்டுக்குள் 4.4 சதவீதமாகக் குறைக்க ஐ.நா. இலக்கு நிர்ணயித்தள்ளது.
31 வளரும் நாடுகள் மிகச் சிறப்பான மருத்துவ வசதிகள் மூலம் குழந்தைகள் இறப்பை மிக அதிகமாக கட்டு்ப்படுத்தியுள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications