திமுக பொதுக் கூட்டத்தில் முதல் முறையாக குஷ்பு!

முதல்வர் கருணாநிதியின் 87வது பிறந்த நாள் வரும் ஜூன் 3ம் தேதி கொண்டாடப்படவுள்ளது.
பிறந்தநாளையொட்டி தென் சென்னை மாவட்ட திமுக சார்பில் ஜுன் மாதம் 3ம் தேதி மாலை பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.
சென்னை திருவான்மியூர் வடக்கு மாட வீதியில் நடக்கும் இக் கூட்டத்தில் நடிகை குஷ்பு கலந்து கொண்டு முதல்வர் கருணாநிதியை வாழ்த்தி சிறப்புரையாற்றுகிறார்.
திமுக பொதுச் செயலாளர் அமைச்சர் அன்பழகன் தலைமையில் நடைபெறும் இக் கூட்டத்தில் பொருளாளரும், துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி ஆகியோரும் பேசுகிறார்கள்.
கூட்டத்தின் முடிவில் முதல்வர் கருணாநிதி ஏற்புரையாற்றுகிறார்.
பிறந்த நாள்-87 பேருக்கு டிவிஎஸ் எக்ஸ்எல்:
இதற்கிடையே திருவண்ணாமலை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் அந்த மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைப்பெற்றது. அதில் பேசிய அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான எ.வ.வேலு,
முதல்வரின் 87வது பிறந்த நாளை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் துடிப்பாக செயல்படும் கீழ்மட்ட திமுக நிர்வாகிகள் 87 பேருக்கு டிவிஎஸ் எக்ஸ்எல் மொபெட் வழங்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications