தேர்தலில் முறைகேடுகளை தடுக்க வேண்டும்-அதிமுக செயற்குழு தீர்மானம்
சென்னை: வேலையில்லாத் திண்டாட்டம், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு என தமிழக மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும்போது, உலகத்தில் உள்ள தமிழினமே கவலையில் ஆழ்ந்திருக்கும்போது, தன்னை மற்றவர்கள் துதி பாட வேண்டும் என்பதற்காக, கோவையில் தன்னல மாநாட்டை நடத்தும் திமுக மைனாரி்ட்டி அரசின் முதலமைச்சர் கருணாநிதியை வன்மையாக கண்டிக்கிறோம் என்று அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள அந்தக் கட்சியின் தலைமைக் கழக அலுவலகத்தில் இந்தக் கூட்டம் நடந்தது.கூட்டத்தில் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம்:
துதி பாட தன்னல கோவை மாநாடு:
கோவையில் நடைபெற உள்ள செம்மொழி மாநாடு, உலகத் தமிழ் மாநாட்டு வரிசையில் இடம்பெறாது. இதற்கு முன் நடைபெற்ற மாநாடுகள் சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்டன. இப்போது முதல்வர் கருணாநிதியால் அறிவிக்கப்பட்டுள்ள மாநாடு, தமிழுக்கு பெருமை சேர்க்கும் மாநாடு அல்ல. இது கருணாநிதியின் புகழ் பாடும் மாநாடு.
மின் வெட்டு, விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு என மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும்போது, இலங்கை, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் வாழும் உலகத்தில் உள்ள தமிழினமே கவலையில் ஆழ்ந்திருக்கும்போது, தமிழக மக்களின் பணத்தை வீணடித்து, தன்னை மற்றவர்கள் பாராட்டி, துதி பாட வேண்டும் என்பதற்காக, தன்னல மாநாட்டை நடத்தும் திமுக மைனாரி்ட்டி அரசின் முதலமைச்சர் கருணாநிதியை வன்மையாக கண்டிக்கிறது.
நதி நீர் பிரச்சனைகள்:
மைனாரிட்டி திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து அண்டை மாநிலங்களுடனான நதி நீர்ப் பிரச்சனைகள் அனைத்தும் நீர்த்துப் போய்விட்டன. காவிரி நதிநீர்ப் பிரச்சனை, முல்லைப் பெரியாறு, பாலாறு மற்றும் பொன்னையாறு, கேரள பாம்பாறு குறுக்கே அணை கட்ட முயற்சிப்பது என தமிழகத்தின் உரிமைகள் அடகு வைக்கப்பட்டு இருப்பதை அதிமுக செயற்குழு கண்டிக்கிறது.
மின் வெட்டு:
மின் வெட்டை அமல்படுத்தியதன் மூலம் விவசாயம் மற்றும் தொழில்கள் பாதிப்படைந்துள்ளன.மின்சாரத்தை தேவைக்கேற்ப உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்காமல், தமிழகத்தை இருளில் மூழ்கச் செய்த திமுக மைனாரிட்டி அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
சட்டம்-ஒழுங்கு:
கடந்த நான்கு ஆண்டு கால திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை, பயங்கரவாத செயல்கள், பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பற்ற நிலை ஆகியவை அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில், இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தக் கூடிய காவல் துறைக்கே தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள் முன்னிலையிலேயே வழக்கறிஞர்கள் ரவுடிகளால் தாக்கப்படுகிற சூழ்நிலை. இந்த அளவுக்கு தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சீரழிக்கப்பட்டதை அதிமுக வன்மையாகக் கண்டிக்கிறது.
விலைவாசி உயர்வு:
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவிற்கு விஷம் போல் ஏற வழிவகுத்த மைனாரிட்டி திமுக அரசை அதிமுக வன்மையாகக் கண்டிக்கிறது.
ஸ்பெக்ட்ரம் ஊழல்:
ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் ஆ. ராசாவை மத்திய அரசு பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
நேர்மையான தேர்தல்:
உண்மையான ஜனநாயகம் தழைத்தோங்க, தேர்தலில் நடைபெறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்தி, தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும், நேர்மையாகவும், பாரபட்சமின்றியும் நடத்த வேண்டும் என்று இந்தியத் தேர்தல் ஆணையத்தை அதிமுக வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
காலாவதி மருந்து-சிபிஐ விசாரணை தேவை:
காலாவதி மருந்து விற்பனை வழக்கிற்கு சிபிசிஐடி விசாரணை என்பது பொருத்தமாக இருக்காது. எனவே, இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவரையும் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த ஏதுவாக காலாவதி மற்றும் போலி மருந்துகள் விற்பனை குறித்த வழக்குகளை மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.) விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறது.
சிறுதாவூர் நிலப் பிரச்சனை:
சிறுதாவூர் நிலப் பிரச்சனையில் அதிமுக மீதும், கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதும் அவதூறு பிரசாரம் செய்து வரும் முதல்வர் கருணாநிதிக்கு எதிராக அதிமுக சார்பில் மான நஷ்ட வழக்குத் தொடர வேண்டும்.
ஜெயலலிதா தலைமையில் மீண்டும் ஆட்சி மலர..:
தமிழர்களின் உரிமைகளைப் பெற்றிட, தங்கு தடையின்றி மின்சாரம் கிடைத்திட, தொழில் மற்றும் விவசாய உற்பத்தியில் தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்ந்திட, விலைவாசியை கட்டுக்குள் கொண்டுவர, ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் சமூக நலத் திட்டங்களை உருவாக்கிட, திமுக அரசை வீழ்த்தி, எம்.ஜி.ஆர். ஆட்சியை ஜெயலலிதா தலைமையில் மீண்டும் மலரச் செய்திட இச்செயற்குழு சூளுரை ஏற்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications