ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்: சீன ஆதரவு கோரும் இந்தியா
பெய்ஜிங்: ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் இடம் கிடைக்க சீனாவின் ஆதரவை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கோரினார்.
சீனா சென்றுள்ள அவர் அந் நாட்டு அதிபர் ஹூ ஜின்டாவோவிடம் இந்தக் கோரிக்கையை முன் வைத்தார்.
இந்தியாவும், சீனாவும் தூதரக உறவுகளை மேற்கொண்டு 60 ஆண்டுகளாகின்றன. இதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் 6 நாள் பயணமாக சீனா சென்றுள்ள பிரதிபாவுக்கு பெய்ஜிங் மக்கள் மாமன்றத்தில் பாரம்பரிய முறையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் அவரை சீன பிரதமர் வென் ஜியாபோ வரவேற்றார்.
இதையடுத்து சீன அதிபர் ஹூ ஜின்டாவோவுடன், பிரதிபா இரு தரப்பு உறவுகள் குறித்தும், அதை வலுப்படுத்துவது குறித்தும் பேச்சு நடத்தினர். அப்போது விமான ஊழியர்களுக்கு விசா வழங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்தும் ஒப்பந்தம், இரு நாடுகள் இடையே நிர்வாகரீதியான பிரச்சனைகளை தீர்ப்பது பற்றிய ஒப்பந்தம், விளையாட்டு துறையில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது தொடர்பாக ஒப்பந்தம் ஆகிய 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
அந்த சந்திப்பின்போது, ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து கிடைக்க சீனாவின் ஆதரவை பாட்டீல் கோரினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், சீனா ஆகியவை உள்ளன. இந்த கவுனசிலில் இந்தியாவுக்கும் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து தர சீனாவும் அமெரிக்காவும் மறைமுகமாக எதிர்த்து வருகின்றன.
இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் நிலையில் மாற்றம் தெரிய ஆரம்பித்துள்ளது. இந் நிலையில் தான் சீனாவின் ஆதரவை இந்தியா நேரடியாகவே கோரியுள்ளது.
பின்னர் பிரதமர் வென் ஜியாபோவை பிரதிபா சந்தித்தபோது, இந்தியாவின் கோரிக்கையை பரிசீலிப்போம் என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து சீன மக்கள் காங்கிரஸ் தலைவர் ஹூ பாங்கோவையும், ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் சந்தித்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் சீனா சென்றுள்ள முதல் இந்திய ஜனாதிபதி பிரதிபா தான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications