ரயில் தாக்குதல்-இரட்டை குழந்தைகளுடன் பலியான தம்பதி: ப.சி-ராணுவ தளபதி சந்திப்பு
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நக்ஸலைட்டுகள் சதியால் ஏற்பட்ட பயங்கர ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 110த்தைத் தாண்டிவிட்டது. காயமடைந்தவர்கள் எண்ணிக்கையும் 300 மேல் அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணிக்கு மேற்கு மித்னாபூர் மாவட்டம் ஜர்கிராம் என்ற இடத்தில் கெம்சோலி- சர்தியா ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தின் ஒரு பகுதியை நக்ஸலைட்டுகள் அகற்றியதால்
ஹெளராவில் இருந்து மும்பைக்கு வந்த லோக்மான்ய திலக் ஞானேஸ்வரி சூப்பர் டீலக்ஸ் எக்ஸ்பிரஸ் ரயில், கவிழ்ந்தது.
பக்கத்து தண்டவாளத்தில் விழுந்த இந்த ரயிலின் 13 பெட்டிகள் மீது அந்த வழியாக வந்த சரக்கு ரயில் மோதியது. இந்த கொடூர விபத்தில் 110க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இதில் ஏராளமான குழந்தைகளும் அடக்கம்.
மாவோயிஸ்டுகள் போஸ்டர்:
இந்த ரயில் கவிழ்ப்பு சம்பவத்துக்கு மாவோயிஸ்ட் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அந்த அமைப்பு விட்டுச் சென்றிருந்த 2 போஸ்டர்கள் சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்டன.
அதில், "மேற்கு மித்னாபூர், புருலியா, பங்குரா ஆகிய பகுதிகளில் இருந்து கூட்டு பாதுகாப்புப் படை விலக்கிக் கொள்ளப்பட வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அத்துமீறல்கள் நிறுத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தோம். இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை'' என்று கூறப்பட்டுள்ளது.
மாவோயிஸ்டுகள் மறுப்பு:
ஆனால், ரயில் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தாங்கள் பொறுப்பில்லை என மாவோயிஸ்டுகளின் அமைப்பான போலீஸ் அராஜகத்துக்கு எதிரான மக்கள் கமிட்டி (பிசிபிஏ) கூறியுள்ளது.
அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அசித் மஹதோ ஒரு செய்தி நிறுவனத்தை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இதைத் தெரிவித்தார்.
அவjfடம், சம்பவ இடத்தில் இருந்து போஸ்டர்கள் கைப்பற்றப்பட்டது குறித்து கேட்டபோது, "நாங்கள்தான் செய்தோம் என எங்கள் பெயரை வேறு யாராவது குறிப்பிட்டால் நாங்கள் என்ன செய்ய முடியும்?. இந்த சதியை யார் செய்தது என்பதைக் கண்டுபிடிப்பது போலீஸாரின் பணி'' என்றார்.
இரட்டை குழந்தைகளுடன் பலியான பெற்றோர்:
இந்த சம்பவத்தில் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜாவித், தனது மனைவி சபியா மற்றும் 7 வயதான இரட்டை பெண் குழந்தைகளுடன் பலியாகியுள்ளார்.
நசுக்கிக் கிடந்த ஒரு பெட்டியை மீட்புக் குழுவினர் வெட்டி உள்ளே புகுந்து பார்த்தபோது அங்கு ஜாவித், சபியா ஆகியோர் இறந்து கிடந்தனர். அருகே 2 பெண் குழந்தைகள் உடல் நசுங்கி பிணமாகக் கிடந்தனர். இருவரும் இரட்டைக் குழந்தைகள் என்பதை அறிந்த மீட்புக் குழுவினர் உடல்களை மீட்கும்போதே அழுதுவிட்டனர்.
விடுமுறைக்காக முதல் முறையாக மும்பைக்கு சென்றபோது விபத்தில் சிக்கிக் கொண்டனர். குழந்தைகள் இருவரும் 2ம் வகுப்பு படித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரவில் ரயில்கள் இனி ஓடாது?:
இதற்கிடையே மாவோயிஸ்டுகள் அதிகளவில் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ள ஒரிஸ்ஸா, பிகார், மேற்கு வங்கம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களின் வழியே இரவு நேரங்களில் ரயில்கள் இயக்கத்தை நிறுத்துவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என ரயில்வே வாரிய உறுப்பினர் (போக்குவரத்து) விவேக் சகாய் கூறியுள்ளார்.
சிதம்பரத்துடன் ராணுவத் தளபதி சந்திப்பு:
இந் நிலையில் ராணுவத் தளபதி வி.கே.சிங் இன்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்து நக்ஸல்கள் விவகாரம் குறித்துப் பேசினார்.
அப்போது மாநில போலீசாருக்கு போர் முறைகள் குறித்து ராணுவம் பயிற்சியளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மீது நக்ஸல்களின் 2வது தாக்குதல்:
இந்த மாதத்தில் அப்பாவி பொதுமக்கள் மீது மாவோயிஸ்டுகள் நடத்தியுள்ள 2வது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மே 17ம் தேதி சட்டீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் பஸ் ஒன்றை மாவோயிஸ்டுகள் வெடிவைத்து தகர்த்ததில் போலீஸ் உயர் அதிகாரிகள் 12 பேர் உள்பட 36 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications