இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசினேனா?-பினாங் துணை முதல்வர் ராமசாமி
சென்னை: மதுரை மாநாட்டில் நான் தவறாக எதையும் பேசவில்லை. எங்கள் நாட்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஈழத் தமிழர்கள் அனைவருக்கும் முழு அங்கீகாரம் அளிப்பேன் என்றுதான் கூறினேன். இதில் இந்திய இறையாண்மை எங்கே வந்தது என்றார் பினாங் துணை முதல்வர் ராமசாமி.
மதுரையில் சீமான் நடத்திய நாம் தமிழர் அரசியல் மாநாட்டில் மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்துப் பேசியதாக உளவுத்துறை இந்திய வெளியுறவுத்துறைக்கு தகவல் அனுப்பியுள்ளது.
இதையடுத்து மலேசிய அரசுக்கு, இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய ராமசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை கடிதம் அனுப்பியுள்ளது.
இந்நிலையில் பினாங்கு துணை முதல்வர் ராமசாமியைத் தொடர்பு கொண்டு இது குறித்துக் கேட்டோம்:
அவர் கூறுகையில், வேறொரு நாட்டில் பேசும்போது எப்படிப் பேச வேண்டும் என்று கூட தெரியாதவனல்ல நான். தமிழ் ஈழத்திற்காகவும், என் தொப்புள் கொடி உறவுகளுக்காகவும் நான் எப்போதும் குரல் கொடுப்பேன்.
அதனால்தான் சீமானின் நாம் தமிழர் அரசியல் மாநாட்டில் கலந்துகொண்டு பேசினேன். இன்னும் ஒரு ஆண்டில் மலேசியாவில் தேர்தல் வரப்போகிறது.
இத்தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால் ஈழத்தமிழர்களுக்கு முழு அங்கீகாரம் அளிப்போம். புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்குவோம். இதை நான் தமிழகத்தில் சீமான் மாநாட்டில் மட்டும் பேசவில்லை. எங்கள் நாட்டிலும் பேசி வருகிறேன்.
ஈழத் தமிழர்கள் விஷயமாக நேற்று கூட ஐ.நா. அதிகாரிகளிடம் பேசினேன். மலேசிய உள்துறையிடமும் பேசினேன். இந்திய வெளியுறவுத்துறையின் கடிதம் பற்றி எதுவும் என்னிடம் தெரிவிக்கவில்லை.
இந்த விவகாரம் குறித்து என்னிடம் கேட்டால், நான் விளக்கமளிக்கத் தயாராக இருக்கிறேன். எங்கள் நாட்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஈழத் தமிழர்களுக்கு முழு உரிமையும் அங்கீகாரமும் அளிப்பேன் என்று கூறியது இந்திய இறையாண்மையை எப்படிப் பாதிக்கும்? என்றார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications