எம்.பி.பி.எஸ், பி.இ விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்: இரவு 9 மணி வரை பி.இ. விண்ணப்பம் தரலாம்
சென்னை: மருத்துவம், பல் மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு விண்ணப்பிக்க இன்றே (மே 31) கடைசி நாளாகும்.
இந் நிலையில் பொறியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க இன்று (திங்கட்கிழமை) கடைசிநாள் என்பதால, இரவு ஒன்பது மணி வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பொறியியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பங்கள் கடந்த 3ம் தேதி முதல் 58 மையங்களில் கொடுக்கப்பட்டுவந்தன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வந்து சேர இன்று (திங்கட்கிழமை) கடைசி நாளாகும்.
இன்று (திங்கட்கிழமை) தமிழ்நாட்டின் எந்த பகுதியி்ல் இருந்து விண்ணப்பம் அனுப்ப்பட்டாலும் அதை அண்ணா பல்கலைக்கழகம் ஏற்றுக் கொள்ளும். ஆனால் இன்றைய தேதியிட்ட தபால் முத்திரை அந்த தபாலில் இருக்க வேண்டும்.
அதேபோல் இன்று இரவு 9 மணி வரை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேரடியாக விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை வரை 1.15 லட்சம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வந்து சேர்ந்தன. கடைசி நாளான இன்று நிறைய விண்ணப்பங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பூர்த்தி செய்த பி.இ. விண்ணப்பங்களைப் பெற அண்ணா பல்கலைக்கழகத்தில் 16 கவுன்டர்கள் செயல்பட்டு வந்தன. கடைசி நாளான இன்று மேலும் 4 கூடுதல் சிறப்புக் கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.
கட்-ஆப் மார்க் ஒருவருக்கு அதிகமானவர்களுக்கு ஒரே அளவில் இருந்தால் யாருக்கு இடம் கொடுப்பது என்பதை நிர்ணயிக்க ரேண்டம் எண் ஜுன் மாதம் 15ம் தேதி வழங்கப்படும்.
பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் எடுத்த கணிதம், வேதியியல், இயற்பியல் ஆகிய மதிப்பெண்கள் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஜுன் 18ம் தேதி வெளியிடப்படும்.
பின்னர் ஜுன் 26ம் தேதி கவுன்சிலிங் தொடங்குகிறது. கவுன்சிலிங் ஜுலை 25ம் தேதி முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் நிறைய மாணவர்கள் விண்ணப்பித்து வருவதால், கவுன்சிலிங் நீடிக்கப்படும் என்று தெரிகிறது.
கவுன்சிலிங் வழக்கம் போல சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications