Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராஜ்யசபா தேர்தல் வேட்பு மனு தாக்கல் தொடக்கம்- பின்னால் பார்த்தபடி நடந்து வந்து மனு தாக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளில் 2 பேர் மனு தாக்கல் செய்தனர். அவர்களில் மனிதன் என்பவர் பின்னால் பார்த்தபடி நடந்து வந்து மனு தாக்கல் செய்தார்.

தமிழகத்திலிருந்து ராஜ்யசபா உறுப்பினர்கள் 6 பேர் ஓய்வு பெற்றதால் அதற்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று முற்பகல் 11 மணியளவில் தொடங்கியது.

முதல் நாளான நேற்று அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. மாறாக இரண்டு சுயேச்சைகள் மட்டும் மனுத் தாக்கல் செய்தனர்.

முதலில் சேலம் மாவட்டம் மேட்டூர் அணை ராமன் நகரை சேர்ந்த கே.பத்மராஜன் மனுத் தாக்கல் செய்தார். அடுத்து, வேலூர் மாவட்டம், திருப்பத்தூரை சேர்ந்த மனிதன் என்பவர் பின்னால் பார்த்தபடி நடந்து வந்து வேட்பு மனுதாக்கல் செய்தார்.

தேர்தலில் போட்டியிட்டு டெபாசிட்டைப் பறிகொடுப்பதில் மன்னன் பத்மராஜன். அதிக தேர்தலில் போட்டியிட்டதற்காக கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார்.

111-வது தேர்தல்

தேர்தலில் போட்டியிடுவது குறித்து இவர் கூறுகையில்,

நான் இந்தியா முழுவதும் ஜனாதிபதி தேர்தல், எம்.பி.க்கள் தேர்தல், எம்.எல்.ஏ.க்கள் தேர்தல் உள்பட இதுவரை 110 தேர்தல்களில் போட்டியிட்டு இருக்கிறேன். தற்போது டெல்லி ராஜ்யசபா தேர்தல் எனக்கு 111-வது தேர்தல் ஆகும். இதற்காக ரூ.10 ஆயிரம் டெபாசிட் தொகையை 10, 10 ரூபாய் நோட்டுகளாக 10 கட்டுகள் கொடுத்துள்ளேன்.

மேலும், வேட்பாளருக்கான உறுதிமொழியையும் தேர்தல் அதிகாரி முன்பு நான் எடுத்து இருக்கிறேன். ஒரு வேட்பாளரை முன்மொழிவதற்கு 10 எம்.எல்.ஏ.க்கள் அதற்கான வேட்பு மனுவில் கையெழுத்திட வேண்டும். ஆனால் எனக்கு முன்மொழிவதற்கு எம்.எல்.ஏ.க்கள் யாரும் கையெழுத்திடவில்லை என்றார்.

மனிதனுக்கு வயது 2,15,49,668 நிமிடங்கள்!

மனிதன் கூறுகையில்,

14.6.1991-ல் இருந்து 20 ஆண்டுகளாக நான் பின்னோக்கி நடந்தபடிதான் சென்று கொண்டிருக்கிறேன். ஜனாதிபதியாகும் வரை நான் இப்படித்தான் நடப்பேன். தற்போது எனது வயது 2 கோடியே 15 லட்சத்து 49 ஆயிரத்து 668 நிமிடங்களாகும். 16 ஆண்டுகளாக நான் பேசாமல் இருந்து சாதனை படைத்தேன்.

2005-ம் ஆண்டு உலக அழகி ஐஸ்வர்யாராயை, நான் பெண் பார்ப்பதற்கு சென்றேன். நான் மவுனமாக இருந்த காலகட்டம் என்பதால் எனது காரியம் கை கூடவில்லை. இனி உலக அழகியாக இந்திய பெண் வரும் போது அவரை நான் மணம் முடிப்பேன். நான் விவசாய தொழிலில் ஈடுபட்டுள்ளேன். வேறு எந்த வேலைக்கும் செல்லவில்லை.

இந்திய ஜனாதிபதி, அமெரிக்க ஜனாதிபதி, ஐ.நா.சபை பொதுச்செயலாளர் ஆகிய பணிகளை மட்டுமே செய்ய விருப்பம் கொண்டுள்ளேன். நான் அமெரிக்க பிரஜை அல்ல. உலக பிரஜை என்பதால் எனக்கு எல்லா தகுதியும் உண்டு. இந்த வேட்பு மனு தாக்கலுக்காக எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்தை நான் பெறவில்லை. ரூ.10 ஆயிரம் டெபாசிட் தொகையையும் தாக்கல் செய்யவில்லை என்று வினோதமாக பேசி முடித்தார் மனிதன்.

இத் தேர்தலில், திமுக சார்பில் கே.பி.ராமலிங்கம், டி.எம்.செல்வகணபதி, எஸ்.தங்கவேலு ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேரும் வெற்றி பெறுவது உறுதி.

அதிமுகவால் சொந்தமாக ஒருவரையும், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் இன்னொருவரையும் தேர்வு செய்ய முடியும். எனவே இரு வேட்பாளர்களை அக்கட்சி நிறுத்துகிறது.

காங்கிரஸ் கட்சிக்கு ஒரு சீட்டை திமுக ஒதுக்கியுள்ளது.

7-ந் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம்

மனு தாக்கல் தொடக்கம் பற்றி தேர்தல் அதிகாரி எம்.செல்வராஜ் கூறுகையில்,

இது வரை 2 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். வருகிற 7-ந் தேதி மாலை 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். 6-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. 8-ந் தேதி மனுக்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா முன்னிலையில் மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 6 பேருக்கு மேல் மனு தாக்கல் செய்திருந்தால் வருகிற 17-ந் தேதி காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணி வரை தலைமை செயலகத்தில் உள்ள குலுக்கல் கூட்டறையில் வாக்குப் பதிவு நடக்கும்.

அதி்முக சந்திரா மற்றும் நியமன எம்.எல்.ஏ. பங்கேற்க முடியாது

இந்த தேர்தலில் ராஜபாளையம் அதி்முக எம்.எல்.ஏ. மு.சந்திரா மற்றும் நியமன எம்.எல்.ஏ. ஆகியோர் பங்கேற்க முடியாது. எம்.எல்.ஏ. சந்திரா இது போன்ற தேர்தலில் பங்கேற்க கூடாது என்று கோர்ட் உத்தரவு உள்ளது. தகுதி வாய்ந்த வாக்காளர்கள் பட்டியலை தயாரித்து வைத்துள்ளோம். அந்த பட்டியலை ரூ.55 கொடுத்து வேட்பாளர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

6 வேட்பு மனுக்களுக்கு மேல் தாக்கல் செய்யாத நிலையில், 10-ந் தேதி அந்த 6 பேரின் பெயரும் அறிவிக்கப்பட்டு ராஜ்யசபா உறுப்பினர் சான்றிதழும் அவர்களுக்கு அன்றே வழங்கப்படும். வேட்பாளர்கள் யார், யார் என்பது 8-ந் தேதி காலை 11 மணிக்கு மேல் தெரிவிக்கப்படும்.

அதிமுக கொறடா வேட்பு மனுக்களைப் பெற்றுச் சென்றுள்ளார். அதேபோல திமுக தரப்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஒருவரும் வேட்பு மனுக்களை வாங்கிச் சென்றுள்ளார்.

இணையத்தளத்திலும் வேட்பு மனுக்களை பெற்றுக்கொள்ளலாம். வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் அனைத்தும் தேர்தல் அதிகாரியின் அறை அருகில் உள்ள விளம்பர பலகையில் அனைவரும் பார்த்துக்கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+