அக்ஷர்தாம் கோவில் தாக்குதல்-மூவருக்கு மரண தண்டனை: உறுதி செய்த குஜராத் ஹைகோர்ட்

2002ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி இந்த ஆலயத்தில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 32 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பொடா சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இதில் முக்கிய குற்றவாளிகள் 3 பேருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது. மேலும் 3 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து 6 பேரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.எம். தோஷித், கே.எம். தாகர் ஆகியோர், குற்றவாளிகளுக்கு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தனர்.
இந்த வழக்கு விசாரணையின்போது நிருபர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தாக்குதலை நடத்தியவர்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த முர்தஸா ஹபீஸ் யாசின், அஷ்ரப் அலி முகமது பரூக் ஆகிய இருவரையும் தேசிய பாதுகாப்புப்படை கமாண்டோக்கள் எதிர் தாக்குதலின்போது சுட்டுக் கொன்றனர்.
பிடிபட்ட தீவிரவாதிகளான ஆஸம் ஆஜ்மீரி, ஷான் மியா, முப்தி அப்சல் கயூம் மன்சூரி ஆகிய மூவருக்கும் 2006ம் ஆண்டில் மரண தண்டனை வழங்கப்பட்டது.
இவர்கள் தவிர, முகம்மத் ஷேக், அப்துல் மியான் காத்ரி, அல்தாப் ஹுசேன் ஆகியோருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 28 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர். இவர்கள் பாகிஸ்தான் அல்லது வளைகுடா நாடுகளுக்குத் தப்பியிருக்கலாம் என்று குஜராத் போலீசார் கூறுகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications