7ம் தேதி கருணாநிதியை சந்திக்கிறார் முத்துசாமி
ஈரோடு: வரும் 7ம் தேதி தனது முதல்வர் கருணாநிதியை சந்திக்கிறார் முன்னாள் அதிமுக அமைச்சர் முத்துசாமி.
ஜானகி அணியில் இருந்தவர் என்பதால் அதிமுக தலைமையால் 15 ஆண்டுகளாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த முத்துசாமி அது குறித்து வெளிப்படையாக பேசியதால் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.
இதையடுத்து அவர் தனது ஆதரவாளர்களுடன் ஈரோட்டில் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறார். அவர்களில் பெரும்பாலோர் திமுகவில் இணைந்துவிடலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய முத்துசாமி,
எங்ளது ஆதரவாளர்களுடன் கலந்து பேசியதில் 99 சதவீதம் பேர் திமுகவில் இணைய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து திமுகவில் சேருவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பேர் குறிப்பாக, ஈரோடு மாவட்டத்தில் இருந்து ஏராளமான பேர் திமுகவில் இணைய உள்ளனர்.
முதல்வர் கருணாநிதி சட்டசபையில் பேசும்போது, தன்னை முதல்வராக்கியவர் எம்.ஜி.ஆர்.தான் என்று கூறியுள்ளார். எனவே, எம்.ஜி.ஆர். விசுவாசிகளான நாங்கள் திமுகவில் சேருவதில் எந்த நெருடலும் இல்லை. அதுவே உண்மையான எம்ஜிஆர் தொண்டர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்.
நாங்கள் கட்சியில் இணைவது பற்றி இதுவரை திமுக தலைமையிடம் பேசவில்லை. இரு பக்கமும் உள்ள பொதுவான நண்பர்கள் மூலம் தான் இது தொடர்பாக பேசி வருகிறோம்.
வரும் 7ம் தேதி ஒரு சிலருடன் சென்னை சென்று முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேச உள்ளோம். இதன்பிறகு திமுகவில் இணைவது பற்றி பேசி முடிவு செய்யப்படும். திமுகவில் இணையும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications