விலைவாசி கட்டுப்படுத்தப்படும்!-மன்மோகன் சிங்

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2-ம் முறையாக பதவியேற்று ஓராண்டு நிறைவுற்றதையடுத்து, அரசின் கடந்த ஆண்டு செயல்பாடுகளை மதிப்பீடு செய்யும் வகையிலான அறிக்கையை (Report Card) மன்மோகன் சிங் டெல்லியில் வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது பிரதமர் பேசுகையில், தீவிரவாதத்தை வேரறுக்க அரசு உறுதி பூண்டுள்ளது. நக்ஸலைட்டுகளை ஒடுக்கி, அரசின் அதிகாரத்தை நிலைநாட்ட தேவையான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
விலைவாசியைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி நிலவும்போதிலும் 8.5 சதவீத வளர்ச்சியை எட்ட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம், ரயில் பயணிகள் கட்டணம் உயர்த்தாதது, 14 வயதுக்குள்பட்டோருக்கு கல்வியை அடிப்படை உரிமையாக்கியது, 20 ஆயிரம் தொடக்கப் பள்ளிகள் தொடங்கியது, சுற்றுச் சூழல் தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க மசோதா நிறைவேற்றியது உள்ளிட்டவை இந்த அரசின் கடந்த ஓராண்டு சாதனை.
நகர்ப்புற குடிசைவாசிகளின் மேம்பாட்டுக்கு ரூ.36 ஆயிரம் கோடியும், ஏர் இந்தியா நிறுவனம் மீட்சியடைய ரூ.1,200 கோடியும் ஒதுக்கப்படும் என்றார்.
பாஜக கடும் விமர்சனம்:
மன்மோகன் சிங் தனது அரசுக்கு தானே மார்க் போட்டுக் கொள்வது கேலிக்கூத்து என்றும், அரசின் ஓராண்டு சாதனையை மக்கள்தான் மதிப்பிட வேண்டும் என்றும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான அருண் ஜேட்லி குறிப்பிட்டார்.
ஓராண்டு அறிக்கை பிரசார அறிக்கைதானே தவிர, உண்மை நிலையை பிரதிபலிக்கவில்லை என்றார் அருண் ஜேட்லி.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications