சென்னைக்கு ராகுல் திடீர் விசிட்
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவுக்குச் சொந்தமான தங்கவேலு பொறியியல் கல்லூரிக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி இன்று திடீர் விஜயம் செய்தார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலுவின், தங்கவேலு பொறியியல் கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ராகுல்காந்தி சென்னை வந்துள்ளார்.
விமான நிலையத்தில் ராகுல்காந்தியை தங்கபாலு உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் வரவேற்றனர். ராகுல்காந்தி வருகையை ஒட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து விழா நடைபெறும் கல்லூரி வரை பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ராகுலின் சென்னை வருகை குறித்து ஏற்கனவே அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
இணையில்லா தலைவர் கருணாநிதி-தங்கபாலு:
இதற்கிடையே முதல்வர் கருணாநிதியின் 87வது பிறந்த நாளையொட்டி தங்கபாலு வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில்,
முத்தமிழ் அறிஞர் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் இன்று 87 ம் அகவையில் அடியெடுத்து வைக்கும் நன்னாள். அரசியலையும், இலக்கியத்தையும் இரு கண்களாக, கலைத்துறை, ஊடகத்துறைகளை கரங்களாகப் போற்றி மக்கள் நலப்பணியை உயிரெனக் கருதி தொண்டாற்றி பெரு வாழ்வு வாழ்ந்து புகழ் சேர்த்துள்ளவர் டாக்டர் கலைஞர்.
கடந்த 65 ஆண்டுகளுக்கு மேலாக இவ்வாறு தமிழுக்கும், தமிழர்க்கும் இடையறாது உழைத்து வரும் இணையில்லா தலைவர் டாக்டர் கலைஞர் மேலான உடல் நலத்துடன் பல்லாண்டு வாழ்ந்து தமிழகம் மேன் மேலும் உயர பணியாற்றி புகழோங்கிட இப்பிறந்த நாளில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் உளமார வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications