கருணாநிதி அறிக்கை வெளியிட தடை விதிக்க வேண்டும்: ஜெயலலிதா வக்கீல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது பேசிய அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா, இந்த வழக்கின் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த ஜெயலலிதாவின் வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன், நாங்கள் கேட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பு நகல், இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை, நகல் கிடைக்காமல் நாங்கள் எப்படி வாதாட முடியும் என்றார்.
இதற்கு அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா, அவர்களிடம் பழைய நகல் காப்பி உள்ளது. அதை வைத்தே வாதாடலாம். இந்த வழக்கின் விசாரணையை, எதிர் தரப்பினர் வேண்டுமென்றே தாமதப்படுத்துகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார்.
அப்போது ஜெயலலிதாவின் வழக்கறிஞர், விசாரணைக்கு நாங்கள் தயாராகத் தான் இருக்கிறோம். உச்ச நீதிமன்றத்தின் புதிய தீர்ப்பில் தான், அனைத்து விவரங்களும் அடங்கியுள்ளன. இதனால் புதிய நகல் காப்பி கிடைத்தால் தான், நாங்கள் வாதாட முடியும்.
மேலும் இந்த நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும்போது, வழக்கு குறித்து தினந்தோறும் அறிக்கைகளை, தமிழக முதல்வர் கருணாநிதி வெளியிட்டு வருகிறார். அதற்கு தடை விதிக்கவேண்டும் என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மல்லிகார்ஜுனய்யா, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல் காப்பிகளை விரைவாக வழங்க வேண்டும் என்று கூறி விசாரணையை வரும் 14ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications