வறுமை-சேலம் அருகே ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை
சேலம்: சேலம் அருகே வறுமையின் காரணமாக ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள செம்மாண்டப்பட்டி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் அரிராம் (58). இவர் தனது மனைவி ராஜேஸ்வரி (50), மகன் வரதராஜன் (34), மருமகள் ஜீவா (30), பேரக் குழந்தைகள் வாணிஸ்ரீ (10), சந்தோஷ்குமார் (ஒன்றரை வயது) ஆகியோருடன் வசித்து வந்தார்.
வீட்டிலேயே தறிக்கூடம் வைத்திருந்த அரிராம், தனது மகன் வரதராஜனுடன் நெசவுப் பணியில் ஈடுபட்டு வந்தார். அதில் குடும்பம் நடத்த போதிய வருவாய் கிடைக்கவில்லை என்று கூறப்படுகின்றது.
இந் நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் வரதராஜன் வீட்டை விட்டு வெளியேறியவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவர் எங்கு சென்றார் என்ற விபரமும் தெரியவில்லை.
இந் நிலையில், அரிராம், ராஜேஸ்வரி, ஜீவா, குழந்தைகள் வாணிஸ்ரீ, சந்தோஷ்குமார் ஆகியோர் வீட்டில் விஷம் குடித்தனர்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவர்களை சேலம் அரசு மருத்துவமனைக்கு அக்கம் பக்கத்தில் இருந்துவர்கள் அனுப்பி வைத்தனர். ஆனால் அதற்குள் அரிராமும், ராஜேஸ்வரியும் உயிரிழந்தனர்.
சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதி்க்கப்பட்ட ஜீவா, குழந்தை வாணிஸ்ரீ ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
மீதமுள்ள ஒன்றரை வயது குழந்தை சந்தோஷ்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications