பிஎச்டி மாணவியிடம் சில்மிஷம்-சென்னை மாநிலக் கல்லூரி பேராசிரியர் கைது
சென்னை: சென்னையில் பிஎச்டி படிக்கும் மாணவியிடம் தவறாக நடந்து, கற்பழிப்புக்கு முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட மாநிலக் கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.
சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்தவர் நேஹா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 24 வயதான இவர் மாநிலக் கல்லூரி பொது நிர்வாகத் துறையில் 2ம் ஆண்டு பிஎச்டி ஆய்வுப் படிப்பில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் இவர் அண்ணா சதுக்கம் காவல்நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், கடந்த மே 18ம் தேதி துறைத் தலைவரான பேராசிரியர் மாதவன் (54) தன்னை அழைத்ததாகவும், துறை அறையில் வைத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், கற்பழிக்க முயன்றதாகவும் கூறியிருந்தார்.
இதுகுறித்து கல்லூரி முதல்வர், பதிவாளர் ஆகியோரிடம் புகார் கொடுத்தேன். ஆனால் அவர்கள் நடவடிக்தை ஏதும் எடுக்கவில்லை. இதனால்தான் கால தாமதமாக போலீஸை அணுகியுள்ளேன் என்று தெரிவித்திருந்தார் நேஹா.
புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸார், திருவான்மியூரில் உள்ள மாதவனின் வீட்டிற்குச் சென்று அங்கு வைத்து அவரைக் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பேராசிரியர் மாதவன் மீது பெண்கள் வன்கொடுமைச் சட்டம் உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 20 வருடங்களாக மாநிலக் கல்லூரியில் பணியாற்றி வருகிறார் மாதவன் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications