புதுச்சேரி சிறையில் கைதிகள் கோஷ்டி மோதல் -ஒருவர் காயம்
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரி மத்திய சிறையில் கைதிகளில் இரு கோஷ்டியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்தார்.
புதுச்சேரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஆயுள் தண்டனை கைதிகள் மத்தியில் கோஷ்டி பூசல் நிலவி வருகிறது. இரு பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மணி என்ற கைதி பலத்த காயமடைந்தான்.
அவனை போலீசார் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். கைதிகள் திடீர் மோதலால் சிறையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications