டிசம்பர் மாதம் தமிழக சட்ட மேலவை தேர்தல் நடைபெறலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மீண்டும் உருவாக்கப்பட்டுள்ள தமிழக சட்ட மேலவைக்கான தேர்தல் டிசம்பர் மாதவாக்கில் நடைபெறலாம் என்று தெரிகிறது.

தமிழகத்தில் ஒழிக்கப்பட்ட சட்ட மேலவை மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 78 உறுப்பினர்கள் இடம்பெறுவர். இவர்களில் எம்.எல்.ஏக்கள், உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள் வாக்களித்து தலா 26 பேரைத்தேர்வு செய்வர். அதாவது 52 பேர் தேர்வாவார்கள்.

பட்டதாரிகள், ஆசிரியர்கள் மூலம் தலா 7 பேர் என 14 பேர் தேர்வு செய்யப்படுவர்.மற்ற 12 பேரை ஆளுநர் நியமிப்பார்.

மேலவைத் தேர்தலை நடத்துவதற்கான பூர்வாங்கப் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பிரதிநிதிகளின் எண்ணிக்கை பற்றிய தகவல்கள், ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகளை பற்றிய தகவல்களைத் தரக்கோரி மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினருக்கு நரேஷ் குப்தா கடிதம் எழுதியுள்ளார். பாராளுமன்ற தேர்தல் முடிந்தபிறகு, 8 இடைத்தேர்தல்களை சமீபத்தில் தேர்தல் ஆணையம் நடத்தியுள்ளது. அதுபோல், வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியும் அவ்வப்போது நடக்கிறது. இதுமட்டுமின்றி, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியும் கடந்த பல மாதங்களாக இடைவிடாது நடந்துவருகிறது. இப்போது கூடுதலாக, சட்டமன்ற மேல்சபை வாக்காளர்கள் தயாரிப்பு பணியும் சேர்ந்து கொண்டிருப்பதால் தேர்தல் ஆணைய ஊழியர்களுக்கு வேலைப்பளு அதிகரித்துள்ளது.

சட்டமன்ற மேல்சபை வாக்குப்பதிவு முறை வித்தியாசமானது. இதன், வாக்குப்பதிவு 2 நாட்களுக்கு நடைபெறும். இதற்காக, வாக்காளர்களுக்கு பிரத்யேக பயிற்சி அளிக்கப்படவேண்டும்.

தேர்தல் அதிகாரிகளுக்கான பயிற்சி ஏற்கனவே தொடங்கிவிட்டது. வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவேண்டியுள்ளது தள்ளிப்போகும்.

வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுவிட்டாலும் நவம்பர் மாதத்துக்கு முன்பு தேர்தல் நடத்த முடியாது. 1950-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 27 (6)-ன்படி, சட்டமன்ற மேல்சபை வாக்காளர் பட்டியல், தயாரிப்பதற்கு நவம்பர் 1-ந் தேதியைத்தான் தகுதி நாளாக கொள்ள வேண்டும் என்பதே அதற்குக் காரணம். வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வந்தாலும், வரும் நவம்பர் 1-ந் தேதிக்குப் பிறகுதான் வாக்காளர் பட்டியலை வெளியிடமுடியும்.

எனவே டிசம்பர் மாத இறுதியில்தான் மேலவை தேர்தல்நடைபெறும் எனத் தெரிகிறது. அல்லது ஜனவரி தொடக்கத்தில் நடைபெறக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+