காஞ்சிபுரம், ஈரோடு, திருச்சி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் நீக்கம்
சென்னை: கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக காஞ்சிபுரம், திருச்சி, ஈரோடு மாவட்ட அதிமுக நிர்வாகிகளை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நீக்கியுள்ளார்.
இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
அ.தி.மு.க.வின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் ஈரோடு புறநகர் மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் எஸ்.கே.ஷேக்மைதீன், தலைமைக்கழக பேச்சாளர் எஸ்.என்.நஞ்சுண்டன், திருச்சி மாநகர் மாவட்ட மணிகண்டம் ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளரும், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினருமான எம்.பழனிச்சாமி ஆகியோர் அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
அ.தி.மு.க.வினர் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இன்னொரு அறிக்கையில்,
காஞ்சீபுரம் கிழக்கு மாவட்டம் தாம்பரம் நகர அ.தி.மு.க. அவைத் தலைவர் பொறுப்பில் இருக்கும் டி.கே.எம்.சின்னய்யா, தாம்பரம் நகர அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பில் இருக்கும் எல்லார்.செழியன் ஆகியோர் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
காஞ்சீபுரம் கிழக்கு மாவட்டம் தாம்பரம் நகர அ.தி.மு.க. அவைத் தலைவர் பொறுப்பில் பி.ஆர்.சுரேஷ்குமார், தாம்பரம் நகர அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பில் டி.கே.எம்.சின்னய்யா (தாம்பரம் நகர மன்ற கழக குழுத் தலைவர்) தாம்பரம் நகர எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் பொறுப்பில் எல்லார் செழியன் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.
வேலூர் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளராக ஆர்.பிரதாப்குமார் நியமிக்கப்படுகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications