சென்னை மாவட்ட இறகுப் பந்து சங்க தலைவராக அன்புமணி தேர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை மாவட்ட இறகுப் பந்து (பாட்மிண்டன்) சங்கத் தலைவராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சென்னை மாவட்ட இறகுப்பந்து சங்கத்தின் 2010-14-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
இதில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைவராகவும், கே. ராஜராஜன் பொதுச்செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
சேதுராமலிங்கம் சீனியர் துணை தலைவராகவும், அருணாச்சலம், ஹரிகிருஷ்ணன், சுதாகர்ராவ், சபாநாயகம், விஜய் கரிகர் ஆகியோர் துணை தலைவர்களாகவும், டி.மாறன் இணைச் செயலாளராகவும், பிரகாஷ் கோஷர் பொருளாளராகவும், சுரேஷ் முத்தையா ஆலோசகராகவும், ஜெயமுருகன் புரவலராகவும், சுதீர் ரெட்டி, பிரதாப், உமாசங்கர், தேவராஜன், அரவிந்த் ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications