செஞ்சி அருகே 62 அரசு இலவச கலர் டிவிக்கள் தீவைத்து எரிப்பு
செஞ்சி: செஞ்சி அருகே பொதுமக்களுக்குக் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த அரசு இலவச கலர் டிவிக்களுக்கு தீவைக்கப்பட்டன. இதில் 62 டிவி பெட்டிகள் கருகி சாம்பலாயின.
விழுப்புரம் மாவட்டம் மேல் மலையனூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது செவலபுரை ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு கடந்த மார்ச் மாதம் தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக 1,359 இலவச கலர் டி.வி.க்கள் வரவழைக்கப்பட்டன. இதில் 1,226 டி.வி.க்கள் வழங்கப்பட்டு விட்டன.
மீதம் இருந்த 133 இலவச கலர் டி.வி.க்கள் செவலபுரை ஊராட்சி மன்ற அலுவலகத்தின் ஒரு அறையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
நேற்று முன்தினம் இரவு யாரோ மர்ம மனிதர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் அங்குள்ள அறையில் வைக்கப்பட்டிருந்த இலவச கலர் டி.வி.க்கள் வெடித்து சிதறின. இதை பற்றி தகவல் அறிந்ததும், தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் 62 டி.வி.க்கள், அலுவலக கம்ப்iட்டர், மற்றும் 9 பிளாஸ்டிக் நாற்காலிகள் ஆகியவையும் தீயில் எரிந்து நாசமானது.
இந்த தீ வைப்பு சம்பவம் பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து, தீ வைத்த மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications