தர்மபுரியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க ஜெ. கோரிக்கை
சென்னை: தர்மபுரி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை திமுக அரசு கைவிட்டதன் காரணமாக தமிழகம் முழுவதும் கடுமையான குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது.
இதனால் அதிகம் பாதிப்படைந்த மாவட்டம் தர்மபுரி. தர்மபுரி மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீருக்காக மக்கள் அலையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற குடிநீரை பருகுவதால் மலேரியா, காலரா போன்ற நோய்களுக்கு அப்பகுதி மக்கள் ஆளாகி வருகிறார்கள்.
நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைக் கூட திமுக அரசு மேற்கொள்ளவில்லை என்று மக்கள் தெரிவிக்கின்றனர். மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை திமுக அரசு கைவிட்டதன் காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் நிலத்தடி நீர் வெகுவாகக் குறைந்துவிட்டது.
இதனால் விவசாய நிலங்களில் பயிரிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சாகுபடி செய்த பயிர்களையும், கால்நடைகளையும் காப்பாற்ற முடியாத அவல நிலை நிலவுவதாக தகவல்கள் வருகின்றன.
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று திமுக அரசு விளம்பரப்படுத்திக் கொள்கிறது. ஆனால், அதை நிறைவேற்றுவதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. மொத்தத்தில் தர்மபுரி மாவட்டம் கடும் வறட்சியில் சிக்கித் தவிக்கிறது. இந்த மாவட்டத்தில் நிலவும் கடுமையான குடிநீர் பஞ்சத்தைப் போக்க திமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தர்மபுரி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், குடிநீர் பஞ்சத்தைப் போக்க வேண்டும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும், மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக சார்பில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
ஜெயலலிதா பேரவைச் செயலாளர் நயினார் நாகேந்திரன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
சிறுதாவூர் நிலம்-மார்க்சிஸ்ட் இன்று ஆர்ப்பாட்டம்:
இந் நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் சிறுதாவூரில் சசிகலாவின் உறவினர்கள் முதலீடு செய்துள்ள ரிசார்ட் நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலத்தை மீட்டு தலித் மக்களுக்கும், நிலமில்லாத ஏழை விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அக் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications